இந்திய அணியின் இந்த நிலைமைக்கு காரணமே இந்த மூன்று பேர் தான்... இப்படியா முடிவு எடுப்பது?

புஜாரா மற்றும் ரஹானேவை அணியில் இருந்து நீக்கி மீண்டும் இரண்டு புதிய வீரர்களுக்குத் தான் வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது.

இந்திய அணியின் இந்த நிலைமைக்கு காரணமே இந்த மூன்று பேர் தான்... இப்படியா முடிவு எடுப்பது?

இந்திய டெஸ்ட் அணியில் அனுபவ வீரர்களே இல்லை என்பது போன்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன், இதற்கு கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் தான் காரணம் என்று ரசிகர்கள் விமர்ச்சித்து வருகின்றனர்.

இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி இருந்த போது அவர் ஒவ்வொரு போட்டியிலும், ஒவ்வொரு தொடரிலும் வீரர்களை மாற்றிக் கொண்டே இருக்கிறார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

ஆனாலும், அவர் புதிய வீரர்களை கண்டறிந்து அணியை பலப்படுத்தினார். சுப்மன் கில், பும்ரா, முகமது சிராஜ், கே எல் ராகுல், குல்தீப் யாதவ் என தற்போது இந்திய அணியில் முக்கிய வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து  விராட் கோலிதான் வளர்த்தார்.

பின்னர் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டே அணித் தேர்வில் ஈடுபட்டு வந்தாலும், நன்றாக ஆடும் வீரர்களை எல்லாம் அணியில் இருந்து நீக்கி விட்டு, பேட்டிங் செய்ய திணறும் வீரர்களை அணியில் சேர்த்துள்ளனர்.

டெஸ்ட் அணியில் நீண்ட காலமாக ஆடி வரும் புஜாரா, ரஹானே ஆகியோரை நீக்கி விட்டு, இளம் வீரர்களை தேர்வு செய்ய முடிவு செய்த இந்திய அணி நிர்வாகம் அதற்காக எடுத்த நடவடிக்கைகள் அணியை இன்னும் மோசமான நிலைக்கே கொண்டு சென்று இருக்கிறது. 

ஸ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில் இருவருக்கும் பல வாய்ப்புகள் அளிக்கப்பட்ட பின்னரும் அவர்கள் நிலையாக ரன் குவிக்கவில்லை. அதனால், ஒரேடியாக இந்திய அணி மோசமான பேட்டிங் வரிசை கொண்ட அணியாக மாறி விட்டது. 

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அணியின் ஒரே அனுபவ வீரர் விராட் கோலியும் இல்லாத நிலையில் ஜெய்ஸ்வால் மற்றும் பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச்களை நம்பியே இருக்கிறது இந்திய அணி.

சுப்மன் கில் இந்த் டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளில் இரண்டாவது இன்னிங்ஸில் மட்டுமே ரன் குவித்து இருக்கிறார். ஸ்ரேயாஸ் ஐயர் மோசமாக ஆடியதால் நீக்கப்பட்டு இருக்கிறார். 

தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரிலேயே படுமோசமாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயரை டெஸ்ட் தொடரில் தேர்வு செய்து இருக்க வேண்டிய அவசியமே இல்லை. ஸ்ரேயாஸ் ஐயர் மீது ரோஹித் சர்மா - ராகுல் டிராவிட் வைத்த நம்பிக்கை வீணாகிப் போய் இருக்கிறது.

விராட் கோலி விலகிய நிலையில் கே எல் ராகுல் காயம் காரணமாக நீக்கப்படவே இந்திய அணியில் அனுபவ பேட்ஸ்மேன்களே இல்லை.  புஜாரா தொடர்ந்து இங்கிலாந்து நாட்டின் உள்ளூர் டெஸ்ட் தொடரிலும், இந்தியாவின் ரஞ்சி டெஸ்ட் தொடரிலும் சிறப்பாக ரன் குவித்து தன்னை நிரூபித்து இருக்கிறார். 

ஆனால், அவரை அணியில் எடுக்கக் கூடாது என்ற முடிவில் ரஜத் படிதார் மற்றும் சர்பராஸ் கான் ஆகிய இருவரை அணியில் சேர்த்தமைதான் ரோஹித் சர்மா, ராகுல் டிராவிட் மற்றும் அஜித் அகர்கர் செய்த தவறு என்று கூறப்படுகின்றது.

நோபால் சர்ச்சை.... களத்தில் சண்டை போட்டதால் வனிந்து ஹசரங்காவுக்கு தடை.... ஐ.சி.சி. அதிரடி!

புஜாரா மற்றும் ரஹானேவை அணியில் இருந்து நீக்கி மீண்டும் இரண்டு புதிய வீரர்களுக்குத் தான் வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது.

நான்காவது போட்டியில் இங்கிலாந்து அணியின் அனுபவ டெஸ்ட் பேட்ஸ்மேன் ஜோ ரூட் தனி ஆளாக நின்று சதம் அடித்தார். அதற்கு இணையாக பேட்டிங் செய்ய இந்திய அணியில் விராட் கோலி இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டார் புஜாரா இருந்திருக்க வேண்டும்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த பும்ராவிற்கு நான்காவது டெஸ்ட்டில் ஓய்வு கொடுத்து இருக்கிறார்கள். அவருக்கு அளிக்கப்பட்டு இருக்கும் ஓய்வு பெரிய தவறாக மாறி உள்ளது. 

நான்காவது டெஸ்ட்டில் முகமது சிராஜால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. பும்ராவிற்கு ஐந்தாவது போட்டியின் போது ஓய்வு அளித்து இருக்கலாம்.  இந்த சொதப்பலுக்கு முக்கிய காரணம் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் தான்.

இந்திய அணியின் இந்த பின்னடைவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கரின் மோசமான முடிவுகளே காரணம் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.