இஸ்ரேலில் 1 இலட்சம் இந்தியர்களை பணியில் ஈடுபடுத்த தீர்மானம்
சுமார் 1 இலட்சம் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளதால் இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீனர்களை உடனடியாக வெளியேறும் படி அந்நாடு உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரேலில் சுமார் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் பணியாற்றி வரும் நிலையில், போர் தொடங்கியதும் அங்கு வேலை பார்த்து வந்த பாலஸ்தீனர்கள் வெளியேறிவிட்டனர்.
இதையடுத்து சுமார் 1 இலட்சம் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.
கட்டுமான பணிகளில் அவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஹமாசுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது. இஸ்ரேலிடம் இருந்து ராணுவ படைகளுக்கான ஆயுதங்களை இந்தியா கொள்முதல் செய்து வருகிறது.
இப்படி இந்தியாவுடன் நட்புணர்வோடு திகழ்ந்து வரும் இஸ்ரேல் இந்திய தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க முடிவு செய்துள்ளதால் இருதரப்புக்கு இடையேயான உறவு மேலும் வலுப்பெற்றுள்ளது.
Israel, Hamas, Israel Hamas War, இஸ்ரேல், ஹமாஸ் இஸ்ரேல் ஹமாஸ் போர், காசா ,ஹமாஸ் தாக்குதல்