முதலாவது தேர்தல்

மாகாண சபைத் தேர்தலை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நடத்தமுடியுமா? என்பது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்டுள்ளார்.

அதன் அடிப்படையில், அதுதொடர்பிலான விசாரணை எதிர்வரும் 23ஆம் திகதிமுதல் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விசாரணைகள் ஆரம்பமாகி, ஒருவாரத்துக்குள் அல்லது 10 நாட்களுக்குள் தனது விளக்கத்தை உயர்நீதிமன்றம் அறிவிக்கும்.

உயர்நீதிமன்றத்தின் விளக்கத்தின் பின்னரே, தேர்தல்கள் தொடர்பில் தீர்மானிக்கமுடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதேவேளை, மாகாண சபைத் தேர்தலை நடத்தவேண்டுமாயின் 50 நாள்களும், ஜனாதிபதி தேர்தல் நடத்தவேண்டுமாயின் 60 நாட்களும் போதும், எந்தத் தேர்தல் முதலில் நடத்தப்பட்டாலும், ஜனாதிபதித் தேர்தலுக்கு எவ்விதமான தாமதமும் ஏற்படாது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.