Sri Lanka 24 Hours Online Breaking News

iPhone சார்ஜரில் வரவுள்ள அதிரடி மாற்றம்

0

iPhone கைத்தொலைபேசிகளை மின்னூட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் Lightning கம்பிவடம் கூடிய விரைவில் மாறலாம்.

அலைபேசிகளுக்கான மின்னூட்டக் கம்பிவடத்தை பொதுவாக உலகளவில் அனைத்து அலைபேசிகளிலும் பயன்படுத்தக்கூடிய வகையில் மாற்றும்படி ஐரோப்பிய நாடாளுமன்றம் நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Apple நிறுவனத்தின் பெரும்பாலான சாதனங்களை மின்னூட்டப் பொதுவாக Lightning கம்பிவடம் பயன்படுத்தப்படுகிறது.

USB-C, micro-USB ஆகிய கம்பிவடங்கள் Android அலைபேசிகளில் பயன்படுத்தப்படுகின்றன.

Apple நிறுவனம் 2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட iPad ரக சாதனத்துக்கு மட்டும் lightning மின்னூட்டக் கம்பிவடத்தைப் பயன்படுத்தவில்லை.

ஐரோப்பிய நாடாளுமன்றம் புதிய நெறிமுறைகளை அறிமுகம் செய்தால், ஐரோப்பாவில் விற்கப்படும் Apple சாதனங்கள் புதிய கம்பிவடத்தோடு விற்கப்படலாம்.

நிறுவனம் USB-C கம்பிவடங்களுக்கு அல்லது கம்பிவடமில்லாத மின்னூட்டத்திற்கு மாறலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Tamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்

Tamil Gossip News | Tamil Online Radios | Sri Lanka News in Tamil | Cinema News in Tamil | Trending Tamil Videos | The Movie Database | Tamil Songs Lyrics | News App Facebook | Twitter | Instagram

Get real time updates directly on you device, subscribe now.

You might also like