போட்டி எப்போது?... சிஎஸ்கே அணியின் முழு அட்டவணை.... முழு விபரம் இதோ!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், 2019ஆம் ஆண்டு முதல் கெய்க்வாட் சிஎஸ்கேவுக்காக விளையாடி வருகிறார்.

போட்டி எப்போது?... சிஎஸ்கே அணியின் முழு அட்டவணை.... முழு விபரம் இதோ!

இந்திய மக்களவை தேர்தல் காரணமாக, ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான அட்டவணை, முழுமையாக வெளியிடப்படாத நிலையில், 21 போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகி இருக்கின்றது.

21 போட்டிகளில், சிஎஸ்கேவுக்கு 4 போட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இன்று ஆர்சிபி, அடுத்து குஜராத் டைடன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கு எதிராக போட்டி நடைபெற உள்ளது.

ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தை அடுத்து, மார்ச் 26ஆம் தேதி குஜராத் டைடன்ஸுக்கு எதிராகவும், மார்ச் 31ஆம் தேதி டெல்லி கேபிடல்ஸ்க்கு எதிராகவும், ஏப்ரல் 5ஆம் தேதி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராகவும் போட்டி நடைபெற உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், 2019ஆம் ஆண்டு முதல் கெய்க்வாட் சிஎஸ்கேவுக்காக விளையாடி வருகிறார். ஜடேஜாவால் கேப்டன்ஸி அழுத்தங்களை சமாளிக்க முடியவில்லை என்பதால்தான், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், டிவோன் கான்வே, பதிரனா ஆகியோர் காயம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதால், ஓபனராக கெய்க்வாட்டுடன் ராசின் ரவீந்திரா விளையாட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp