காத்திருந்த ரசிகர்கள்... களமிறங்கிய தோனி... மைதானத்தில் செய்த செயல்!

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனி பேட்டிங் செய்த போது முதல் பந்திலேயே ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். 

காத்திருந்த ரசிகர்கள்... களமிறங்கிய தோனி... மைதானத்தில் செய்த செயல்!

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனி பேட்டிங் செய்த போது முதல் பந்திலேயே ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். 

டெல்லி அணியுடனான நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியின் விளிம்பில் இருந்த நிலையில், பேட்டிங் செய்ய வந்த தோனியை ரசிகர்கள் கொண்டாடினர்.

தோனி முதல் பந்திலேயே நான்க ஓட்டங்களை விளாச மைதானத்தில் இருந்த ஒட்டுமொத்த ரசிகர்களும் மகிழ்ச்சியில்ஆர்ப்பரித்தனர்.

தோனியின் அதிரடி ஆட்டம் வீணானது..  சிஎஸ்கேவை வீழ்த்திய டெல்லி அணி!

பாகிஸ்தான் அணிக்கு எதிராக 2005இல் இதே விசாகப்பட்டினம் மைதானத்தில் தான் தோனி தனது முதலாவது சர்வதேச சதத்தை அடித்து இருந்தார். அதன்போது 148 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

தற்போது 19 ஆண்டுகள் கழித்து, தனது கடைசி ஐபிஎல் தொடரில் ஆடுவதாக கூறப்படும் தோனி மீண்டும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 191 ரன்கள் குவித்த நிலையில், சிஎஸ்கே அணி பேட்டிங் செய்ய ஆரம்பித்த போது, ரச்சின் ரவீந்திரா 2 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 1 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அதன் பின் ரஹானே 45, டேரில் மிட்செல் 34 ரன்கள் எடுத்த போது சிவம் துபே 17 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே எடுத்தார். சமீர் ரிஸ்வி டக் அவுட் ஆனார். அதன் பின் ஜடேஜா களத்தில் நிற்க, தோனி வந்தார்.

அதன் பின் 16 பந்துகளில் 37 ரன்கள் அடித்தார் தோனி. 4 ஃபோர் மற்றும் மூன்று சிக்ஸ் அடித்து இருந்தார். 

எனினும், சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் மட்டுமே எடுக்க, டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கியது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp