தொடர்ந்து புறக்கணிப்பு... தமிழக வீரரை அசிங்கப்படுத்திய பிசிசிஐ.. வலுக்கும் எதிர்ப்பு!

தமிழக்கை சேர்ந்த சாய் சுதர்சன், 12 போட்டிகளில் ஒரு சதம் உட்பட 527 ரன்களை குவித்து அசத்தி இருக்கிறார்.

தொடர்ந்து புறக்கணிப்பு... தமிழக வீரரை அசிங்கப்படுத்திய பிசிசிஐ.. வலுக்கும் எதிர்ப்பு!

ஐபிஎல் 17ஆவது சீசனில் இறுதிப் போட்டிக்கு பின்னர், சீசனில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு, 12 விருதுகள் வழங்கப்பட்டன.  அப்போது வழங்கப்பட்ட ஒரு விருதில், பெரிய தவறு நடந்திருப்பதாக ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

அதாவது, வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டிக்கு எமர்ஜிங் வீரர் விருது வழங்கப்பட்டது. இவர் 15 போட்டிகளில் 303 ரன்களையும், 3 விக்கெட்களையும் வீழ்த்தி இருக்கிறார். ஆனால், இவரைவிட, ஒருவர் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்.

இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்த மோடி, அமித் ஷா... கம்பீர் கடும் நிபந்தனை... நடந்தது என்ன?

தமிழக்கை சேர்ந்த சாய் சுதர்சன், 12 போட்டிகளில் ஒரு சதம் உட்பட 527 ரன்களை குவித்து அசத்தி இருக்கிறார். வெறும் 12 போட்டிகளில் 527 ரன்களை குவித்தபோதும், இவருக்கு விருதை வழங்கவில்லை.

சாய் சுதர்ஷனை தொடர்ந்து, ஹர்ஷித் ராணா 12 போட்டிகளில் 19 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். அதுமட்டுமல்ல, ஐபிஎல் பைனலில் ஒரு மெய்டண் ஓவரை வீசி உள்ளார். ஆனால், இந்த இருவரையும் விட்டுவிட்டு, நிதிஷ் ரெட்டிக்கு எமர்ஜிங் வீரர் விருது வழங்கப்பட்டுள்ளது.

சமீப காலமாகவே, இந்திய அணியில் தமிழக வீரர்களுக்கு இடம் கிடைப்பதில்லை. டி நடராஜன் தொடர்ந்து அபாரமாக பந்துவீசியும், ரிசர்வ் வீரர் இடத்தில் கூட வாய்ப்பு வழங்கவில்லை. 
தொடர்ந்து சொதப்பும் ஆவேஷ் கானுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது, எமர்ஜிங் வீரர் பிரிவிலும், சாய் சுதர்ஷனை புறக்கணித்துள்ளதால், 'சுதர்ஷனை திட்டமிட்டு, புறக்கணித்து, அசிங்கப்படுத்திவிட்டதாக' ரசிகர்கள் இணையத்தில், ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...