ரோஹித் சர்மாவை வாங்க பேச்சுவார்த்தை? போட்டி போடும் அணிகள்... பயிற்றுவிப்பாளர் வெளியிட்ட தகவல்!
ஐபிஎல் 17ஆவது சீசனுக்கு முன்னாபக லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி ரோஹித் சர்மாவை வாங்கும் என, அந்த அணியின் பயிற்சியாளர் கூறியுள்ளார்.
ஐபிஎல் 17ஆவது சீசனுக்கு முன்னாபக லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி ரோஹித் சர்மாவை வாங்கும் என, அந்த அணியின் பயிற்சியாளர் கூறியுள்ளார்.
ஐபிஎல் 17ஆவது சீசனுக்கு முன், ட்ரேடிங் மூலம் ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியதை தொடர்ந்து அந்த அணியில் ஏற்பட்ட சர்ச்சைகள் இன்னும் நிறைவுக்கு வரவில்லை.
ஹர்திக் பாண்டியா கேப்டனாக பொறுப்பேற்றப் பிறகு, ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், பும்ரா போன்றவர்கள் அவருக்கு வாழ்த்துகளை சொல்லவில்லை.
அத்துடன், போட்டி நடைபெறும்போது, ரோஹித் சர்மா ஆலோசனை கூற வரும்போது, ஹர்திக் கண்டுகொள்ளாமல் செல்வது போன்ற விஷயங்கள் நடந்து உள்ளது.
ரோஹித்தை இப்படி அவமதிப்பதால், ஹர்திக் பீல்டிங் செய்யும்போது, ரோஹித் சர்மா ரசிகர்கள் ஹர்திக்கை தொடர்ந்து அவமதித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், மும்பை நிர்வாகம் சமரசம் செய்தும், ரோஹித் அதனை ஏற்க மறுத்ததாகவும் ஐபிஎல் 17ஆவது சீசன் முடிந்தப் பிறகு ரோஹித் சர்மா வேறு அணிக்கு செல்வார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், சில அணிகள் ரோஹித் சர்மாவை தொடர்புகொள்ள ஆரம்பிக்கும் எனக் கருதப்படுவதுடன், முதல் அணியாக லக்னோ அணி ரோஹித்தை கேட்டுள்ளது.
இந்த நிலையில், பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி பயிற்சியாளர் ஜஸ்டின் லெங்கர், 'ரோஹித் சர்மா தமது அணிக்கு வர வேண்டும் என விரும்புவதாகவும் இதுகுறித்து, மும்பை அணியுடன் பேசவுள்ளதாக கூறியுள்ளார்.
அத்துடன், பஞ்சாப் கிங்ஸ் அணியும் ரோஹித் சர்மாவை வாங்கி, 18ஆவது சீசனில் அவரை கேப்டனாக நியமிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், சிஎஸ்கே, ஆர்சிபி ஆகிய அணிகளும் ரோஹித் சர்மாவுக்காக பேச்சு வார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகின்றது.