அடுத்தடுத்து சோதனை - ஹாட்ரிக் தோல்வியை சந்தித்தது ஹர்திக் பாண்டியாவின் மும்பை இந்தியன்ஸ்!
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
17வது ஐபிஎல் தொடரின் 14வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு வெறும் 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 34 ரன்களும், திலக் வர்மா 32 ரன்களும் எடுத்தனர்.
பந்துவீச்சில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக டிரண்ட் பவுல்ட் மற்றும் சாஹல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதன்பின் 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜெய்ஸ்வால் (10), பட்லர் (13) உள்ளிட்ட வீரர்கள் ஏமாற்றம் கொடுத்தகர்.
இருந்தாலும், கடந்த போட்டிகளை போலவே இந்த போட்டியிலும் மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய ரியான் பிராக் 39 பந்துகளில் 54* ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் 15.3 ஓவரில் இலக்கை இலகுவாக எட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியும் பெற்றது.