பிசிசிஐ கொடுத்த கெடு.. தோனி விளையாடுவாரா? ஐபிஎல் மினி ஏலம் எப்போது? 

ஐபிஎல் தொடரில் மினி ஏலம் எங்கு எப்போது நடக்கிறது. ஐபிஎல் தொடரில் எந்த அணி எந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்கிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம். 

பிசிசிஐ கொடுத்த கெடு.. தோனி விளையாடுவாரா? ஐபிஎல் மினி ஏலம் எப்போது? 

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அடுத்த மிகப்பெரிய தொடரான ஐபிஎல் தொடர் குறித்து அனைவரின் கண்களும் திரும்பி உள்ளன.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் மினி ஏலம் எங்கு எப்போது நடக்கிறது. ஐபிஎல் தொடரில் எந்த அணி எந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்கிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம். 

முன்னதாக மினி ஏலத்திற்கு தயாராகும் வகையில் ஒவ்வொரு அணிகளும் எந்த வீரர்களை விடுவிக்கிறோம் எந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்கிறோம் என்ற விவரத்தை வரும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என பிசிசிஐ கெடு விதித்திருந்தது.

ஆனால் அப்போது உலகக்கோப்பை தொடர் முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் என்பதால் இந்த கெடு தற்போது நவம்பர் 26 ஆம் தேதி வரை மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. 

இதனால் சிஎஸ்கே அணியில் தோனி விளையாடுவாரா இல்லை விடுவிக்கப்பட்டிருப்பாரா என்பது தொடர்பான தகவல்கள் நவம்பர் 26 ஆம் தேதி நமக்கு தெரிந்துவிடும். 

இதனைத் தொடர்ந்து ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்திருக்கிறது .

இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணிக்கும் கூடுதலாக 5 கோடி ரூபாய் செலவழிக்க அனுமதி அளிக்கப்படும். அதே வகையில் ஒவ்வொரு அணிக்கும் வீரர்களுக்கு அளிக்கப்படும் சம்பளம் 100 கோடி ரூபாயை தாண்டாத வகையில் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. 

இந்த ஏலத்திற்கு முன்பே ஒவ்வொரு அணியும் தங்களிடம் உள்ள வீரர்களை வேறு அணியுடன் மாற்றிக் கொள்ளலாம். அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி லக்னோ அணியிடம் இருந்த ரோமரொயோ செப்பர்ட்டை 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது சிஎஸ்கே விடம் ஒன்றரை கோடி ரூபாய் எஞ்சி இருந்த நிலையில் தற்போது பிசிசிஐ வழங்கிய கூடுதலான ஐந்து கோடி ரூபாய் மற்றும் அம்பத்தி ராயுடுவின் ஓய்வு என மொத்தம் 13 கோடியே 25 லட்சம் ரூபாய் இருக்கிறது. சிஎஸ்கே அணி பென் ஸ்டோக்சை விடுவித்தால் இந்த தொகை மேலும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp