2024 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் - வீரர்களின் விலை பட்டியல் வெளியானது... குறைந்த விலை கேட்டுள்ள அதிரடி வீரர்!
ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கு பெற்றுள்ள வீரர்களின் அதிகபட்ச விலை இரண்டு கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், இந்த பட்டியலில் மொத்தம் 25 வீரர்கள் உள்ளனர்.
ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக 2024 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இந்தியாவுக்கு வெளியே வரும் டிசெம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது.
10 அணிகளுக்கும் மொத்தம் 77 வீரர்கள் தேவைப்படும் நிலையில் ஐபிஎல் மினி ஏலத்தில் 1166 வீரர்கள் தங்களுடைய பெயரை பதிவு செய்தார்கள். ஆனால் மினி ஏலத்தில் மிகவும் குறைவான அளவிலேயே வீரர்களின் இறுதி பட்டியல் வெளியாகும்.
இந்த நிலையில் ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கு பெற்றுள்ள வீரர்களின் அதிகபட்ச விலை இரண்டு கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், இந்த பட்டியலில் மொத்தம் 25 வீரர்கள் உள்ளனர்.
இந்திய வீரர்கள் ஹர்சல் பட்டேல், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், கேதர் ஜாதவ், முஜிபுர் ரஹ்மான், இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக், ஆதில் ரசித், டேவிட் வில்லி தென்னாப்பிரிக்கா வீரர் வெண்டர் டூசன், ரீய்லி ரூசோவ், ஆஸ்திரேலியா அணி கேப்டன் பாட் கம்மின்ஸ், ஆட்டநாயகன் டிராவிஸ் ஹேட், ஜாஸ் ஹேசல்வுட், ஸ்டார்க், ஸ்மித், இலங்கை வீரர் அஞ்சலோ மேத்யூஸ், ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம் பெற்று உள்ளனர்.
கோலி, ராகுல் சாதனையை உடைத்து தெறிக்க விட்ட ருதுராஜ்... டி20யில் அதிரடி சாதனை!
அத்துடன், ஒன்றரை கோடி ரூபாய் அடிப்படை விலையாக ஆஸ்திரேலியா வீர மோய்சஸ் ஹென்ரிக்யூஸ், கிறிஸ் லீன், கேன் ரிச்சர்ட்சன், டானியல் சம்ஸ், ஆப்கானிஸ்தான் வீரர் முஹம்மது நபி, இலங்கை வீரர் ஹசரங்க ,வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஃஹோல்டர், செர்பேன் ரூத்தர்போர்ட், இங்கிலாந்து வீரர் டாம் கரன், கிறிஸ் ஜார்டன் ,டேவிட் மாலன், தைமல் மில்ஸ், பில் சால்ட்,நியூசிலாந்து வீரர் கோரி அண்டர்சன், காலின் முன்ரோ, ஜிம்மி நீஷம், டிம் சவுதி, ஆகியோரது பெயர்கள் உள்ளன.
அத்துடன், ஒரு கோடி ரூபாய் விலை அடிப்படை விலையில் தென்னாப்பிரிக்கா வீரர் பிரிட்டோரியஸ், டேவிட் வீசி, வெஸ்ட் இண்டீஸ் வீரர் அல்சாரி ஜோசப் ரோமன் போவெல், ஆஸ்திரேலிய வீரர்கள் ஏகார், இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸ், நியூசிலாந்து வீரர் மைக்கேல் பிரேஸ்வெல், மார்டின் குப்தில், கைல் ஜேமிசன் டாரல் மிச்சல் ஆகியோர் பெயர்கள் உள்ளன.
இதேவேளை, உலகக் கோப்பை தொடரில் தெறிக்கவிட்ட நியூஸிலாந்து வீரர் ரச்சின் ரவீந்தரா வெறும் 50 இலட்சத்திற்கு தன்னுடைய பெயரை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.