சிஎஸ்கேவின் தோல்வியால் ஏற்பட்ட நிலை... புள்ளி பட்டியலில் அதிரடி மாற்றம்!

கடைசி கட்டத்தில் தோனி அதிரடியாக ஆடி 16 பந்துகளில் 37 ரன்கள் சேர்க்க சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 எடுத்தது.

சிஎஸ்கேவின் தோல்வியால் ஏற்பட்ட நிலை... புள்ளி பட்டியலில் அதிரடி மாற்றம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் தோல்வியை தழுவி உள்ளதுடன், இது புள்ளி பட்டியலில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

13 வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, ஐந்து விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்ததுடன், இதனை அடுத்து, சிஎஸ்கே அணி 7 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

எனினும் கடைசி கட்டத்தில் தோனி அதிரடியாக ஆடி 16 பந்துகளில் 37 ரன்கள் சேர்க்க சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 எடுத்தது.

இந்த நிலையில், சிஎஸ்கே அணியானது மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றி பெற்றுள்ளதுடன், தற்போது முதல் தோல்வியை தழுவி இருக்கிறது. 

இதனையடுத்து, புள்ளி பட்டியலில் சிஎஸ்கே முதல் இடத்தில் இருந்து சரிந்து இரண்டாவது இடத்திற்கு சென்றுள்ளதுடன், முதல் இடத்தில் கொல்கத்தா அணி இருக்கிறது. 

அந்த அணி விளையாடிய 2 போட்டிகளிலும் வென்று நான்கு புள்ளிகள் உடன் முதலிடத்தில் உள்ளதுடன், ரன் ரேட் 1.04 ஆக உள்ளது.

சிஎஸ்கே அணி நான்கு புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. சிஎஸ்கே ரன் ரேட் 0.97 ஆகும். மூன்றாவது இடத்தில் ராஜஸ்தான அணி உள்ளதுடன், அது 2 போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்று நான்கு புள்ளிகள் உடன் 0.80 என ரன் ரேட் அடிப்படையில் உள்ளது.

மூன்று போட்டிகளில் விளையாடிய குஜராத் அணி இரண்டு வெற்றி பெற்று நான்கு புள்ளிகள் உடன் நான்காவது இடத்தில் உள்ளது. ரன் ரேட் மைனஸ் 0.73 . 

ஐதராபாத் அணி 2 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும், லக்னோ 2 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும் உள்ளன.

இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ள டெல்லி அணி இரண்டு புள்ளிகள் உடன் ஏழாவது இடத்தில் இருக்கிறது. ரன் ரேட் மைனஸ் 0.01. 

எட்டாவது இடத்தில் பஞ்சாப் அணி இரண்டு புள்ளிகள் உடனும், ஒன்பதாவது இடத்தில் பெங்களுர் அணியும் உள்ளதுடன், மும்பை அணி பத்தாவது இடத்தில் இருக்கின்றது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp