பயிற்சிக்கு வர ரோஹித் மறுப்பு... அணிக்கு எப்போது திரும்புவார்? வெளியேற வாய்ப்பு இருக்கா?

மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமிக்கப்பட்டதில் இருந்து, சர்ச்சை தொடர்ந்து வருகிறது.

பயிற்சிக்கு வர ரோஹித் மறுப்பு... அணிக்கு எப்போது திரும்புவார்? வெளியேற வாய்ப்பு இருக்கா?

மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமிக்கப்பட்டதில் இருந்து, சர்ச்சை தொடர்ந்து வருகிறது.

குஜராத் அணியில் இருந்து ஹர்திக்கை வாங்கி, மும்பை அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு, ரோஹித் சர்மா, பும்ரா, சூர்யகுமார் ஆகியோர் வாழ்த்துகூட சொல்லவில்லை.

இதன்மூலம், ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்ததில், ரோஹித், பும்ரா, சூர்யகுமார் போன்றவர்களுக்கு உடன்பாடு இல்லை எனத் தெரிகிறது. மேலும், மும்பை ரசிகர்கள் சிலரும் கேப்டன்ஸி மாற்றத்திற்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள்.

2013-ல் மும்பை அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா, குறுகிய காலத்திலேயே அணிக்கு 5 கோப்பைகளை வென்றுகொடுத்து அசத்தினார். 

தற்போது அவர் இந்திய அணிக் கேப்டனாக நிடிக்கும் நிலையில், ஐபிஎல் கேப்டன் பதவியை பறித்தது, சரியான முடிவு கிடையாது என பலர் கருதுகிறார்கள்.

சமீபத்தில் மும்பை அணி, பயிற்சியை துவங்கிய நிலையில், பயிற்சி வகுப்பில் ரோஹித் சர்மா, பும்ரா, சூர்யகுமார் போன்றவர்கள் பங்கேற்கவில்லை. முதல் இரண்டு நாட்கள் பயிற்சிக்கு செல்லவில்லை.

இந்நிலையில், அதிருப்தியில் இருக்கும் ரோஹித் சர்மா, முதுகு வலி பிரச்சினை இருப்பதாக கூறி, முதல் 5 போட்டிகளில் இருந்து விலக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. 

ஆனால், அதிருப்தி காரணமாகத்தான் ரோஹித் சர்மா, பயிற்சிக்கு செல்லவில்லை எனவும் கூறப்பட்டது.

இந்தநிலையில், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம், ரோஹித் சர்மாவுடன் பேச்சு வார்த்தை நடத்தியிருப்பதாகவும், இதனால், ரோஹித் சர்மா இன்று அல்லது நாளை மும்பை இந்தியன்ஸ் பயிற்சி களத்திற்கு செல்வார் எனத் தகவல் வெளியாகி இருக்கின்றது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp