முதல் போட்டி சென்னையில்… 2024 ஐபிஎல் தொடருக்கான அட்டணையை இதோ!
2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான அட்டவணையை ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான அட்டவணையை ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த 2008ம் ஆண்டில் இருந்து இந்தியாவில் உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
ரசிகர்களின் மிகப்பெரும் ஆதரவை பெற்றுள்ள ஐபிஎல் தொடரில் இதுவரை 16ம் சீசன்கள் நிறைவடைந்துள்ளன.
இந்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், இந்த வருட ஐபிஎல் தொடருக்கான அட்டவணையை தேர்வு செய்வதிலும் பெரும் இழுப்பறி நிலவி வந்தது.
இந்த நிலையில், 2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணையை ஐபிஎல் நிர்வாகம் தற்போது அறிவித்துள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு எஞ்சியுள்ள போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்படும் எனவும் ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மார்ச் 22ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் போட்டி நடைபெற உள்ளது. இதில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டூபிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியை எதிர்கொள்ள உள்ளது.
இரண்டாவது போட்டியில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணியும், மூன்றாவது போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகளும் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளன.
மும்பை இந்தியன்ஸ் அணி 24ம் தேதி நடைபெற இருக்கும் தனது முதல் போட்டி குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.