15 பந்தில் 33 விளாசிய கோலி.... ஆனா அது தப்பு? கண்காணிக்கும் பிசிசிஐ.. வெளியான அதிர்ச்சி தகவல்!
டி20 உலகக் கோப்பை 2024 தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலியின் இடம் உறுதியாகாத நிலையில், ஐபிஎலில் அதிரடி காட்ட ஆரம்பித்து உள்ளார்.ஜனவரியில்
டி20 உலகக் கோப்பை 2024 தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலியின் இடம் உறுதியாகாத நிலையில், ஐபிஎலில் அதிரடி காட்ட ஆரம்பித்து உள்ளார்.ஜனவரியில்
நடைபெற்ற ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் முதல் போட்டியில் விளையாடாத கோலி, இரண்டாவது போட்டியில் 16 பந்தில் 29 ரன் அடித்தார்.
மூன்றாவது போட்டியில் டக் ஆன நிலையில், ஐபிஎல் 2024 தொடரில் அதிரடியாக விளையாடியாக வேண்டிய கட்டாயத்தில் கோலி இருந்தார். முதல் போட்டியில் சிஎஸ்கேவுக்கு எதிராக 20 பந்தில் 21 ரன்னை மட்டும் அடித்த கோலி, அடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக துவக்கத்தில் 15 பந்தில் 33 ரன்களை குவித்தார்.
முதல் 15 பந்தில் 33 அடித்த கோலி, அடுத்த 29 பந்துகளில் 34 ரன்களைதான் சேர்த்தார். அதுமட்டுமல்ல, முதல் 15 பந்தில் ஒரு சிக்ஸரை கூட அடிக்கவில்லை.
அடுத்த 29 பந்தில் 2 சிக்ஸர் உட்பட 34 ரன்னைதான் அடித்தார். சிக்ஸரை தவிர்த்து, அந்த 29 பந்தில் 22 ரன்னைதான் அடித்து இருக்கிறார். கோலியால் பவுண்டரிகளை மட்டுமே சுலபமாக அடிக்க முடிந்ததாக, கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
டி20 உலகக் கோப்பை 2024 தொடருக்கான விராட் கோலி இடம் இன்னமும் உறுதியாகாத நிலையில், இனி வரும் போட்டிகளில் அவர் மிடில் ஓவர்களில் அதிக சிக்ஸர்களை அடித்தால் மட்டுமே, அவருக்கு டி20 உலகக் கோப்பை அணியில் இடம் கிடைக்கும் என தகவல் கசிந்துள்ளது.