சென்னை அணியில் முக்கிய மாற்றம்.. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமாக விளையாடி வருவதுடன்,  6வது முறையாக கோப்பையை கைப்பற்றும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது. 

சென்னை அணியில் முக்கிய மாற்றம்.. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமாக விளையாடி வருவதுடன்,  6வது முறையாக கோப்பையை கைப்பற்றும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது. 

வழமையாக புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் சிஎஸ்கே அணி இம்முறை பிளே ஆப் சுற்றுக்கு செல்லவே தடுமாறி வருகின்றதுடன், சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்த வீரர்கள் யாரும் பார்மில் இல்லாததுதான் வீழ்ச்சிக்கு காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்ததுள்ளது.

சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்துள்ள ராகுல் திருப்பாதி, தீபக் ஹூடா போன்ற வீரர்கள் தடுமாறி வருவதுடன், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்த ரச்சின் ரவீந்தராவும் ஐபிஎல் தொடரில் தடுமாறி வருகிறார். 

மேலும், ஆல் ரவுண்டர் ஜடேஜா நடப்பு சீசனில் ஆறு போட்டியில் விளையாடி மொத்தமாகவே 85 ரன்கள் தான் அடித்துள்ளதுடன், இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி உள்ளார்.

சிஎஸ்கே வீரர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் சொதப்பி வருவதால் அந்த அணி தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் இனியாவது இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து எதிர்கால அணியை உருவாக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் சிஎஸ்கே அணி எஞ்சியிருக்கும் போட்டிகளில் வன்ஷ் பேடியை அணிக்குள் கொண்டு வர வேண்டும். வன்ஷ் பேடிக்கு வாய்ப்பு வழங்கி சிஎஸ்கே அணி பயன்படுத்த வேண்டும். இதுபோன்று மூன்றாவது வீரராக சாயிக் ரசித்தை பயன்படுத்த வேண்டும்.

ஏன் என்றால், அண்டர் 19 கிரிக்கெட்டில் தன்னுடைய திறமையை நிரூபித்துள்ள சாயிக் ரசித் நல்ல ஃபீல்டரும் கூட. நான்காவது வீரராக சிவம் துபேவே தொடர வேண்டும். 

சிவம் துபேவும் பெரிய அளவில் பார்மில் இல்லை என்றாலும், அவரைத் தவிர தற்போது வேறு வீரர் இல்லை. ஐந்தாவது வீரராக ஜமி ஓவர்டனை சேர்க்க வேண்டும். ஆறாவது வீரராக ஜடேஜாவை விளையாட வைக்க வேண்டும். 

ஜடேஜா தற்போது தடுமாறி வந்தாலும், அவரை தவிர தற்போது வேறு வீரம் இல்லை என்பது கசப்பதன உண்மை. இதனால் ஜடேஜா பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும். 

ஏழாவது வீரராக மகேந்திர சிங் தோனியை பயன்படுத்த வேண்டும். தோனியும் உடல் தகுதி பிரச்சனை காரணமாக பெரிய அளவு பேட்டிங் செய்தது கிடையாது. இருப்பினும் மற்ற வீரர்களை ஒப்பிட்டு பார்த்தால் தோனி நன்றாக தான் விளையாடுகிறார்.

இந்த தருணத்தில் எட்டாவது வீரராக அஸ்வினுக்கு பதிலாக ஸ்ரேயாஸ் கோபாலை பயன்படுத்த வேண்டும். இதேபோன்று ஒன்பதாவது வீரராக அன்ஷுல் காம்போஜை சேர்க்க வேண்டும். நல்ல ஆல் ரவுண்டர் என்பதால் அவருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

பத்தாவது வீரராக சிஎஸ்கே அணியில் சுழற் பந்துவீச்சாளரான நூர் அகமதுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். 11 வது வீரராக பதிரானாவை சேர்க்க வேண்டும். பதிரானா முன்பு போல் பெரிய அளவில் பந்து வீசவில்லை என்றாலும் அவர் மீது சிஎஸ்கே அணி நம்பிக்கை வைக்கலாம்.

இந்த தருணத்தில் கலீல் அகமதை சிஎஸ்கே அணி இம்பேக்ட் வீரராக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பேட்டிங் செய்யும்போது சிவம் துபேவும் பந்து வீசும் போது கலில் அகமதும் பிளேயிங் லெவனில் இருக்க வேண்டும்.

இந்த பிளேயிங் லெவனை தயார் செய்தால் சிஎஸ்கே அணிக்கு வெற்றி வாய்ப்பு ஒரு அளவுக்கு இருக்கும். சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் காயம் காரணமாக வெளியில் இருக்கிறார். அவருக்கு பதில் சிஎஸ்கே அணி ஒரு வீரரை வாங்கிக் கொள்ளலாம். 

ஆனால் அந்த வீரர் வெளிநாட்டு வீரராக கூட இருக்கலாம். ஏனென்றால் சிஎஸ்கே அணியில் ஒரு வெளிநாட்டு வீரருக்கான இடம் எஞ்சி இருக்கிறது. இந்த தருணத்தில் சிஎஸ்கே அணி பிரித்விஷா அல்லது பிராவிஸ் போன்ற வீரர்களை தேர்வு செய்யலாம்.

இதனால் தோனி என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. இன்று சிஎஸ்கே அணி லக்னோ அணியை எதிர்த்து அதன் சொந்த மண்ணில் விளையாடுகிறது.