திடீரென 5 முக்கிய வீரர்களை கழற்றிவிடும் சிஎஸ்கே: ஸ்டார் பௌலருக்கும் ஆப்பு?
மகேந்திரசிங் தோனி ஓய்வு அறிவிப்பை வெளியிடவில்லை என்றால், அடுத்த சீசனுக்கு முன் நிச்சயம் தக்கவைக்கப்படுவார்.
ஐபிஎலில் 18ஆவது சீசனுக்கான மெகா ஏலத்திற்கு முன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 5 வீரர்களை வெளியேற்ற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
கடந்த சீசனில் கோப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அதே வேகத்துடன் நடப்பு சீசனிலும் களம் இறங்கியதுடன், முதல் 6 போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்ற நிலையில், அடுத்து சொதப்ப ஆரம்பித்தது.
அடுத்த 8 போட்டிகளில் 4 வெற்றிகளைதான் பெற முடிந்த நிலையில் பிளே ஆப் வாய்ப்பும் பறிபோனது. சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக இருந்த மகேந்திரசிங் தோனி, 17ஆவது சீசன் துவங்குவதற்கு முன், கேப்டன் பதவியில் இருந்து விலகி, ருதுராஜ் கெய்க்வாட்டிடம் அந்த பதவியை கொடுத்த நிலையில், அவரும் அபரமாக கேப்டன்ஸி செய்து அசத்தினார்.
சில வீரர்கள் விலகியதுதான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடைசி நேரத்தில் சொதப்ப முக்கிய காரணம் என்று கூறப்படுகின்றது. மதிச பதிரனா, முஸ்தபிசுர் ரஹ்மான், டிவோன் கான்வே போன்ற வீரர்கள் இல்லாமல்தான், சிஎஸ்கே விளையாடியதுதான் சொதப்பலுக்கு முக்கிய காரணம்.
அடுத்து 18ஆவது சீசனுக்கு முன் மெகா ஏலம் நடைபெறவுள்ளதுடன், இதில் ஒரு அணி 4 வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும். 2 வெளிநாட்டு வீரர்கள், 2 உள்நாட்டு வீரர்கள் அல்லது 3 உள்நாட்டு வீரர்கள், ஒரு வெளிநாட்டு வீரரை தக்கவைக்க வேண்டும். அத்துடன், ஒரேயொரு வீரரை ஒயில்ட் கார்ட் என்ட்ரி மூலம், எடுக்க முடியும்.
அதேபோல், ஒரு அணி நான்கு வீரர்களை அல்லது அனைத்து வீரர்களையும் விடுவிக்க முடியும். இந்த நடைமுறை இந்தாண்டு நவம்பரில் நடைபெறும் என்பதால், அனைத்து அணிகளும் தற்போது இருந்தே, தங்களுக்கு தேவையில்லாத வீரர்களின் லிஸ்டை தயார் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
அந்த வகையில், சிஎஸ்கே அணியானது 5 முக்கிய வீரர்களை விடுவிக்க தயாராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அஜிங்கிய ரஹானே, டேரில் மிட்செல், ஷர்தூல் தாகூர், தீபக் சஹார், மொயின் அலி ஆகிய 5 வீரர்களை விடுவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, மகேந்திரசிங் தோனி ஓய்வு அறிவிப்பை வெளியிடவில்லை என்றால், அடுத்த சீசனுக்கு முன் நிச்சயம் தக்கவைக்கப்படுவார் என கூறப்படுகின்றது.