சிஎஸ்கேவால் பிளே ஆஃப் செல்ல முடியுமா?  எந்த அணி வென்றால் நல்லது?

நடப்பு ஐபிஎல் சீசன் தற்போது முக்கிய கட்டத்தை எட்டி உள்ள நிலையில், புள்ளி பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பத்தாவது இடத்தில் இருக்கிறது.

Apr 25, 2025 - 08:02
சிஎஸ்கேவால் பிளே ஆஃப் செல்ல முடியுமா?  எந்த அணி வென்றால் நல்லது?

நடப்பு ஐபிஎல் சீசன் தற்போது முக்கிய கட்டத்தை எட்டி உள்ள நிலையில், புள்ளி பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பத்தாவது இடத்தில் இருக்கிறது.

8 போட்டிகளில் ஆறு போட்டிகளில் சிஎஸ்கே அணி தோல்வியை தழுவியுள்ளதுடன், எஞ்சிருக்கும் ஆறு போட்டிகளில் கண்டிப்பாக வெற்றிப்பெற வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.

அது மட்டுமில்லாமல் ஏனைய அணிகளின் வெற்றி தோல்விகளும் சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது.

இன்று நடைபெறும் சிஎஸ்கே சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். அவ்வாறு வெற்றிப்பெற்றால், சன்ரைசர்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பு குறைந்துவிடும்.

கொல்கத்தா, பஞ்சாப் அணிக்கு இடையிலான போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற வேண்டும். பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் அவர்களுடைய பிளே ஆப் சுற்றி வாய்ப்பு பிரகாசமாகிவிடும். 

அத்துடன், மும்பை, லக்னோ அணிக்கு இடையிலான போட்டியில் மும்பை அணி வெற்றி பெற வேண்டும். ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் டெல்லி, ஆர் சி பி அணிக்கு இடையிலான போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற வேண்டும். 

திங்கட்கிழமை நடைபெறும் ராஜஸ்தான் குஜராத் அணிக்கு இடையிலான போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற வேண்டும். ஏப்ரல் 29ஆம் தேதி செவ்வாய்க்கிழமை டெல்லி, கொல்கத்தா அணிக்கு இடையிலான போட்டியில் டெல்லி அணி வெற்றிப்பெற வேண்டும்.

30ஆம் தேதி நடைபெறவுள்ள சிஎஸ்கே பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெறுவதுடன், மே முதலாம் தேதி மும்பை ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மும்பை அணி வெற்றி பெற வேண்டும். 

அத்துடன், மே இரண்டாம் தேதி குஜராத் சன்ரைசர்ஸ் அணிக்கு இடையிலான போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற வேண்டும். மே 3 ஆர் சி பி, சி எஸ் கே அணி எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி வெல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!