தோனிக்கே இந்த நிலையா? அவரைவிட அதிக சம்பளம் வாங்கும் சிஎஸ்கே வீரர்கள்... பட்டியல் இதோ!

சிஎஸ்கே அணியில் இடம் பிடித்து இருக்கக்கூடிய ஆல்ரவுண்டர் சிவம் துபேக்கு 12 கோடி ரூபாய் சம்பளம் தரப்படுகிறது. 

தோனிக்கே இந்த நிலையா? அவரைவிட அதிக சம்பளம் வாங்கும் சிஎஸ்கே வீரர்கள்... பட்டியல் இதோ!

ஐபிஎல் முதல் சீசனில் அதிக சம்பளம் வாங்கிய வீரர்களில் ஒருவராக இருந்த தோனி தற்போது 17 சீசனங்கள் முடிவடைந்த நிலையில், மற்ற வீரர்களை பணம் கொடுத்து எடுக்க வேண்டும் என்பதற்காக தோனி தன்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொண்டார்.

இதனால் தற்போது தோனிக்கு வெறும் 4 கோடி ரூபாய் தான் சிஎஸ்கே அணியில் சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தோனியை விட சிஎஸ்கே அணியில் 8 வீரர்கள் அதிக சம்பளம் வாங்குகிறார்கள். 

சிஎஸ்கே அணியில் அதிகபட்சமாக 2 வீரர்கள் ஒரே அளவில் சம்பளம் வாங்குகிறார்கள். அதன்படி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 18 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். ஆல்ரவுண்டர் ஜடேஜாவும் 18 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார். சிஎஸ்கே அணியில் மூன்றாவது அதிகபட்ச சம்பளம் வாங்கும் வீரராக இலங்கையைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் பதிரான இருக்கிறார்.

பதிரானவுக்கு சிஎஸ்கே அணி 13 கோடி ரூபாய் தருகிறது. இதேபோன்று சிஎஸ்கே அணியில் இடம் பிடித்து இருக்கக்கூடிய ஆல்ரவுண்டர் சிவம் துபேக்கு 12 கோடி ரூபாய் சம்பளம் தரப்படுகிறது. 

ஐந்தாவது இடத்தில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த நூர் முகமது இருக்கிறார். அவருக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் தரப்பட உள்ளது. ஆறாவது இடத்தில் அஸ்வின் இருக்கின்றார். அஸ்வினுக்கு ஒன்பது கோடியே 75 லட்சம் ரூபாய் சம்பளம் சிஎஸ்கே அணியால் தரப்பட உள்ளது. 

இந்த பட்டியலில் ஏழாவது இடத்தில் நியூசிலாந்தை சேர்ந்த கான்வே இருக்கிறார். கான்வேக்கு 6 கோடியே 25 லட்சம் ரூபாய் சம்பளம் தரப்படுகிறது. எட்டாம் இடத்தில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமது இருக்கிறார். அவருக்கு 4 கோடியே 80 லட்சம் சம்பளம் தரப்படுகிறது. 

தோனி பேட்டிங்கில் அதிரடியாக ஆடி வந்தாலும் அவரால் நடுவரிசையில் களமிறங்க முடியவில்லை. அது மட்டும் இல்லாமல் தற்போது விக்கெட் கீப்பராக மட்டும் தான் அவர் செயல்படுகிறார். இதனால் தான் தன்னுடைய சம்பளத்தை அவர் குறைத்துக் கொண்டார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp