பணத்துக்காக இப்படியா? பழசை மறக்கலாமா? சர்ச்சையில் சிக்கிய ஹர்திக்
ஹர்திக் பாண்டியா முதல் சீசனில் சாம்பியன் பட்டத்தை வென்றதால், இந்திய டி20 அணியின் கேப்டனாகவும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா, மீண்டும் மும்பை அணிக்கு சென்றுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஆல் ரவுண்டராக மட்டுமே ரசிகர்களால் அறியப்பட்ட ஹர்திக் பாண்டியாவை மும்பை அவரை கழற்றி விட்ட பிறகு குஜராத் அணி அவருக்கு வாய்ப்பு கொடுத்து கேப்டன் ஆக்கியது.
இதனை பயன்படுத்திய ஹர்திக் பாண்டியா முதல் சீசனில் சாம்பியன் பட்டத்தை வென்றதால், இந்திய டி20 அணியின் கேப்டனாகவும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
இந்த நிலையில், ஹர்திக் திடீரென்று குஜராத்தை கைவிட்டு மும்பை அணிக்கு சென்றது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில், ஹர்திக் பாண்டியாவை மறைமுகமாக விமர்சிக்கும் விதமாக இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆகாஷ் சோப்ரா பதிவிட்டுள்ளார்.
”உங்கள் வாழ்க்கையில் ஒரு முறை உங்களுக்கு ஒரு வாய்ப்பு வரும். பணமா இல்லை பாரம்பரியமா என்பதை முடிவெடுக்கும் சூழலில் நீங்கள் தள்ளப்படுவீர்கள். அப்போது நீங்கள் எதை தேர்வு செய்கிறீர்களோ அதுதான் உங்கள் வாழ்க்கையை நீங்கள் யாரென்று விவரிக்கும்” என்று அவர் காட்டமாக கூறியிருக்கிறார்.