டிராவிட் பேசியும் கேட்காத இஷான் கிஷன்... இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாட மறுப்பு... வெளியான தகவல்!
பிசிசிஐ தரப்பில் மறைமுகமாக எவ்வளவோ முறை கூறப்பட்டும், ரஞ்சி போட்டிகளில் களமிறங்கும் எண்ணத்திலேயே இஷான் கிஷன் இல்லை.
தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு முன்பாக மனசோர்வு என்று கூறிய இளம் வீரர் இஷான் கிஷன் இந்தியாவுக்கு திரும்பினார்.
இதையடுத்து துபாய் சென்று தொலைக்காட்சிகளில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
பின்னர் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராபியிலும் இஷான் கிஷன் விளையாடவில்லை. இதையடுத்து முதல் 2 போட்டிகளில் இஷான் கிஷன் கழற்றிவிடப்பட்டு, அவருக்கு பதிலாக துருவ் ஜுரெல் தேர்வு செய்யப்பட்டார்.
அதன்பின்னரும் பிசிசிஐ தரப்பில் மறைமுகமாக எவ்வளவோ முறை கூறப்பட்டும், ரஞ்சி போட்டிகளில் களமிறங்கும் எண்ணத்திலேயே இஷான் கிஷன் இல்லை.
இஷான் கிஷன் செய்த காரியம்... உச்சகட்ட கோபத்தில் பிசிசிஐ
இதனால் கோபமடைந்த பிசிசிஐ, ஒப்பந்தத்தில் இருந்து இஷான் கிஷனை நீக்கி உள்ளதுடன் அதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.
ரஞ்சி போட்டிகளில் விளையாடுமாறு இந்திய அணி நிர்வாகம் மற்றும் பயிற்சியாளர்கள் தரப்பில் இஷான் கிஷனுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால் இந்திய அணி நிர்வாகத்தின் ஆலோசனையை இஷான் கிஷன் ஏற்கவில்லை. அத்துடன், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட தயாரில்லை என்று இஷான் கிஷன் மறுத்துள்ளார்.
அதன்பின்னரே துருவ் ஜுரெலை களமிறக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.