எனக்கு இதுதான் முதல் தடவை... ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.... ரோகித் சர்மா பேச்சு

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று ஆரம்பித்து உள்ளது.

எனக்கு இதுதான் முதல் தடவை... ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.... ரோகித் சர்மா பேச்சு

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று ஆரம்பித்து உள்ளது.

டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியில் மார்க் வுட் மட்டுமே வேகப்பந்துவீச்சாளராக இருக்கிறார். 

ஆண்டரசன் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இந்திய அணியில் விக்கெட் கீப்பராக கேஎஸ்.பரத் வருகிறார் வேகப்பந்து வீச்சாளர்களாக பும்ரா மற்றும் சிராஜ் இருக்கிறார்கள். 

குல்தீப்பை விட்டு அக்சர் படேல் உடன் விளையாடுகிறார்கள். மற்றபடி இந்தியா ஒரே வீரர்களுடன் விளையாடுகிறது.

டாஸ் போட்ட பிறகு பேசிய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா,  “டாஸ் வென்று இருந்தால் நாங்களும் பேட்டிங் செய்து இருப்போம். விக்கெட் நன்றாக டிரையாக தெரிகிறது. ஆனால் முதலில் பேட்டிங் இல்லை பந்துவீச்சு எதுவென்றாலும் எங்களிடம் அதற்கான நல்ல திறமைகள் இருக்கின்றன. நாங்கள் அதற்கான வீரர்களை வைத்திருக்கிறோம். நன்றாக செயல்பட முடியும் என்று நம்புகிறோம்.

நான் முதல் முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறேன். அணியின் வீரர்களும் உற்சாகமாக இருக்கிறார்கள் மேலும் இது சவாலானதாக இருக்கும். 

இதற்கு முன்பும் இது போன்ற சூழ்நிலைகளில் விளையாடியிருக்கிறோம். இங்கு என்ன தேவை என்பது எங்களுக்கு தெரியும். உங்கள் திறமைகளை நீங்கள் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும்.

நாங்கள் 2 வேகப்பந்து பேச்சாளர்கள் மற்றும் மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை கொண்டிருக்கிறோம். இன்று குல்தீப் யாதவை விலக்குவது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. 

அக்சர் விளையாடிய போதெல்லாம் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என சிறப்பாக செயல்பட்டார். ஆஸ்திரேலியாவுடன் அவர் நல்ல ஸ்கோர் அடித்தார். எனவே நாங்கள் அவருடன் செல்கிறோம்” என்றார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp