தோல்விய ஏற்றுக்கொள்ளவே முடியலை.. புலம்பி தள்ளிய பட்லர்!
இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் சிறப்பாக தொடங்கியுள்ளது. 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் ஆடிய இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் விளையாடியது.
இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் சிறப்பாக தொடங்கியுள்ளது. 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் ஆடிய இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் விளையாடியது.
இதில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 282 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 36.2 ஓவர்களில் 1 ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து இலக்கை எட்டி வெற்றிபெற்றது.
அந்த அணியின் தொடக்க வீரர் கான்வே 152 ரன்களும், இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா 123 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இதனால் இங்கிலாந்து அணி மோசமான தோல்வியை அடைந்தது. முழுக்க முழுக்க அட்டாக்கிங் செயல்திட்டத்தோடு விளையாடியதே தோல்விக்கு காரணமாக அமைந்தது.
இந்த தோல்வி குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் பேசுகையில், நிச்சயம் எங்களின் ஆட்டம் ஏமாற்றமாக உள்ளது. நியூசிலாந்து அணி எங்களை அனைத்து துறைகளிலும் வீழ்த்தியுள்ளது. தோல்வியை ஏற்பதே கடினமாக உள்ளது.
எங்கள் அணியில் உள்ள வீரர்கள் பலரும் நல்ல அனுபவம் கொண்ட வீரர்கள். நியூசிலாந்து அணி எங்களை வீழ்த்தியதை போல் நாங்கள் பல அணிகளை வீழ்த்தி இருக்கிறோம். அதேபோல் இதற்கு முன்பாக இதேபோல் தோல்வியும் அடைந்திருக்கிறோம்.
நாங்கள் பேட்டிங்கின் போது 330 ரன்களை இலக்காக நிர்ணயிக்க வேண்டும் என்று நினைத்தோம். அதேபோல் பிட்ச் இரண்டாவது பேட்டிங்கின் போது கூடுதல் சாதகம் ஏற்பட்டது.
அதேபோல் அவர்களுக்கு நல்ல தொடக்க கிடைத்த பின் அழுத்தம் கொடுப்பது கடினமாக மாறிவிட்டது. எங்கள் பேட்டிங்கின் போது சில நல்ல ஷாட்கள் விளையாடிய போதும் விக்கெட்டுகளை இழந்துவிட்டோம்.
இந்த ஆடுகளத்தில் குறைந்த அளவிற்கு தவறு செய்யும் அணியே வெற்றிபெறும். கான்வே பெரிய ஷாட்களை விளையாடாமலேயே விரைவாக ரன்கள் சேர்த்துவிட்டார்.
அதேதான் ரச்சின் ரவீந்திராவும் செய்தார். அவர்கள் இருவருமே மிகச்சிறந்த பார்ட்னர்ஷிப் அமைத்து எங்களை வீழ்த்தினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இரண்டாவது பவுலிங் செய்வது கடினமாக அமைந்தது.
அதனால் தான் டாஸின் போதே பந்துவீச வேண்டும் என்று நினைத்ததாக கூறினேன். ஜோ ரூட் வழக்கம் போல் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் ரன்கள் சேர்ப்பார்.
பென் ஸ்டோக்ஸை பொறுத்தவரை பிசியோவுடன் இணைந்து செயல்படுகிறார். எப்போது அணிக்கு திரும்புவார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.