மலையாள சேச்சியாவே மாறிய டிராகன் பட ஹீரோயின்!
மலையாளத்தில் மாஸ்டர்ஸ் எனும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமான இவானா, தெலுங்கில் சிங்கிள்ஸ் எனும் படத்திலும் நடித்து வருகிறார்.

பாலா இயக்கத்தில் நாச்சியார் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை இவானா, சிவகார்த்திகேயன் உடன் இணைந்து ஹீரோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
பின்னர், பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படத்தில் இவானாவை ஹீரோயினாக வைத்து படமெடுத்து மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தார்.
இந்த ஆண்டு வெளியான டிராகன் படத்திலும் கிளைமேக்ஸில் இவானா கேமியோவாக வந்தாலும் அவர் தான் கடைசியில் ஜோடியாக மாறுகிறார்.
மலையாளத்தில் மாஸ்டர்ஸ் எனும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமான இவானா, தெலுங்கில் சிங்கிள்ஸ் எனும் படத்திலும் நடித்து வருகிறார்.
கேரளாவை சேர்ந்த இவானா தமிழில் அதிக படங்களில் நடித்து வரும் நிலையில், தமிழ் புத்தாண்டு மற்றும் விஷு பண்டிகையை முன்னிட்டும் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இளைஞர்களின் தூக்கத்தை ரொம்பவே கெடுக்கும் விதமாக உள்ளன.