ஒட்டுமொத்த தொடரையே மாற்றிய 10ஆவது விக்கெட்... வரலாற்றில் இடம் பிடித்த ஆகாஷ் - பும்ரா!
இந்திய அணி 252 ரன்களுக்கு 9 விக்கெட் என்ற ஸ்கோருடன் ஐந்தாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. 27 ரன்களில் இருந்த ஆகாஷ் தீப் கூடுதலாக நான்கு ரன்கள் சேர்த்து ஆட்டம் இருந்தார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளதுடன், நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
மூன்றாவது டெஸ்ட் போட்டியை எப்படியாவது இந்திய அணி டிரா செய்தாலே அது மிகப் பெரிய வெற்றியாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் காபா டெஸ்ட் போட்டியில் மழையின் தாக்கமும் அதிகமாக இருந்ததால், அது ஆஸ்திரேலியாவுக்கு தலைவலியை ஏற்படுத்தியது.
முதலில் ஆஸ்திரேலியா 445 ரன்கள் குவிக்க இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்தது. இதனால் ஃபாலோ ஆனை தவிர்க்க இந்தியா போராடியது. இந்த சூழலில் கடைசி விக்கெட்டுக்கு பும்ராவுடன் ஜோடி சேர்ந்த ஆகாஷ் எதிர்பாராத வகையில் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை லாவகமாக எதிர் கொண்டு ரன்களை சேர்த்தனர்.
பாட் கம்மின்ஸ், ஸ்டார்க் நாதன் லயன் ஆகியோரின் பந்துவீச்சை அபாரமாக தாக்கு பிடித்த இந்த ஜோடி இந்தியாவின் ஃபாலோ ஆனை தவிர்த்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா மீண்டும் பேட்டிங் செய்ய வாய்ப்பு ஏற்பட்டதால் இந்த போட்டி சமனில் முடியும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் இந்திய அணி 252 ரன்களுக்கு 9 விக்கெட் என்ற ஸ்கோருடன் ஐந்தாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. 27 ரன்களில் இருந்த ஆகாஷ் தீப் கூடுதலாக நான்கு ரன்கள் சேர்த்து ஆட்டம் இருந்தார்.
இதன் மூலம் இந்திய அணி 78.5 ஓவர் முடிவில் 260 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பத்தாவது விக்கெட்டுக்கு பும்ரா, ஆகாஷ் தீப் ஜோடி 46 ரன்கள் சேர்த்து அசத்தியிருக்கிறது.
பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த ஒரு பார்ட்னர்ஷிப் தற்போது ஒட்டுமொத்த தொடரும் இந்தியாவுக்கு சாதகமாக மாற்றி இருக்கிறது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய வந்த போது மின்னல் வெட்டும் அபாயம் இருந்ததால், போட்டி தடைப்பட்டு இருக்கிறது. இன்றைய நாள் முழுவதும் அதிகம் மழைக்கு வாய்ப்பு இருப்பதால் இந்த போட்டி நிச்சயம் டிராவாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.