ஹர்திக்கை தொடர்ந்து மற்றுமொரு நட்சத்திர வீரர் விலகல்.. கடுப்பில் பிசிசிஐ... கம்பீர்தான் காரணமா?
ஹர்திக் பாண்டியாவும் இலங்கை சுற்றுப்பயணத்தில் இருந்து விலகி இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றதை அடுத்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
கம்பீர் பொறுப்புக்கு வந்த பிறகு இந்தியா பங்கேற்கும் முதல் தொடராக இலங்கை அணி எதிராக மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடர் இருக்கின்றது.
இந்த போட்டிகள் இம்மாதம் ஜூலை 27ஆம் தேதி தொடங்குகிறது. இந்த சூழலில் ஒரு நாள் போட்டியில் ஏற்கனவே விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் பங்கேற்க மாட்டோம் என்று அறிவித்தனர்.
இலங்கை தொடரில் இருந்து திடீரென விலகிய ஹர்திக்... இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் யார்?
இதனையடுத்து, ஹர்திக் பாண்டியாவும் இலங்கை சுற்றுப்பயணத்தில் இருந்து விலகி இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.
இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகளில் ஸ்டார் வீரர்கள் இல்லாதது ஏற்nகனவே கம்பிருக்கு எரிச்சலை தந்திருக்கிறது. இந்த சூழலில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான பும்ராவும் இலங்கைத் தொடரிலிருந்து விலகி விடுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் எந்த வீரர்களை களம் இறக்கி விளையாடுவது என்ற கோபத்தில் பிசிசிஐ உள்ளதுடன், ஒருவருக்கு பின் ஒருவராக இலங்கை தொடர்ந்து வெளியேறி இருப்பது கம்பீருக்கு எரிச்சலை கொடுத்திருக்கின்றது.
இதனால் கம்பீரின் வருகை ஸ்டார் வீரர்களுக்கு பிடிக்கவில்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்திய அணி செப்டம்பர் மாதத்தில் இருந்து ஜனவரி மாதம் வரை சுமார் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளதால், இந்த போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக நட்சத்திர வீரர்கள் தற்போது ஓய்வில் உள்ளதாக கூறப்படுகின்றது.