ரோஹித் கேப்டன்ஸிக்கு எதிர்ப்பு.. பிசிசிஐக்கு கடிதம் எழுதும் பும்ரா? திடீர் பரபரப்பு!

ரோஹித் சர்மாவின் கேப்டன்ஸி திருப்திகரமாக இல்லை என பும்ரா, பிசிசிஐக்கு மின்னஞ்சல் அனுப்பவும் அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ரோஹித் கேப்டன்ஸிக்கு எதிர்ப்பு.. பிசிசிஐக்கு கடிதம் எழுதும் பும்ரா? திடீர் பரபரப்பு!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நடைபெற்ற சமயத்தில், ரோஹித் சர்மா, இரண்டாவது குழந்தைக்கு தந்தையானதால், விடுப்பில் இருந்தார்.

அப்போது, முதல் டெஸ்டிற்கு ஜஸ்பரீத் பும்ரா தான் கேப்டனாக இருந்தார். டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது, முதலில் குறைந்த ஸ்கோரை அடித்தாலும் கூட, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அபாரமாக பந்துவீசி, கேப்டன் பும்ரா வெற்றிப்பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன், ரோஹித் சர்மா இந்திய அணியில் இணைந்ததால், பும்ராவின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது.

இரண்டாவது டெஸ்டில் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட்ட நிலையில், டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆனால், பிட்ச் துவக்கத்தில் பௌலர்களுக்கு சாதகமாகவும், அடுத்து முழுக்க முழுக்க பேட்டர்களுக்கு சாதகமாக இருந்ததால், ஆஸ்திரேலிய அணியினர் அபார வெற்றியைப் பெற்றனர். 

இப்போட்டியில், ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருந்தால், வெற்றியைப் பெற்றிருக்க அதிக வாய்ப்பு இருந்திருக்கும் எனக் கருதப்படுகிறது. மேலும், ரோஹித் சர்மா சமீப காலமாகவே பார்ம் அவுட்டில் இருக்கும் நிலையில், அவர் மீண்டும் அதேபோல், பேட்டிங்கில் படுமோசமாக சொதப்பியதும் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமல்ல, ஆஸ்திரேலிய அணிக்கு வெறும் 19 ரன்களை மட்டுமே இலக்காக நிர்யணித்தபோதும், பும்ராவுக்கு முதல் ஓவரை கொடுத்தார். பும்ரா, தொடர்ந்து ஓய்வில்லாமல் விளையாடி வருவதால், அவருக்கு அவ்வபோது ஓய்வு கொடுக்கப்பட வேண்டியது அவசியம். ஆனால், கிட்டதட்ட தோல்வி உறுதியான போட்டியிலும் பும்ராவுக்கு முதல் ஓவரை ரோஹித் வழங்கினார். 

இந்த விஷயங்களால், ரோஹித் சர்மா மீது பும்ரா அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மூன்றாவது டெஸ்டிற்கான முதல் நாள் பயிற்சி வகுப்பை ஜஸ்பரீத் பும்ரா புறக்கணித்திருப்பதும், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், இரண்டாவது டெஸ்டில், ரோஹித் சர்மாவின் கேப்டன்ஸி திருப்திகரமாக இல்லை என பும்ரா, பிசிசிஐக்கு மின்னஞ்சல் அனுப்பவும் அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்திய அணி, அடுத்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் வென்றால் மட்டுமே, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு, நேரடியாக முன்னேற முடியும். ஒரு தோல்வியை சந்தித்தாலும், மற்ற அணிகளின் வெற்றி, தோல்வி முடிவுகளை பொறுத்துதான் பைனல் வாய்ப்பு இருக்கும் என்பதால்தான், ரோஹித் சர்மாவின் பார்ம், கேப்டன்ஸி பிரச்சினை மீது பும்ரா அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp