பும்ராவுக்கு என்ன நடந்தது? மருத்துவருக்கு பிசிசிஐ அழைப்பு.. சாம்பியன்ஸ் டிராபி குறித்து இறுதி முடிவு!

இன்று வெளியாக உள்ள மருத்துவ அறிக்கையில் போட்டிகளில் விளையாட நீண்ட காலம் ஆகும் என மருத்துவர்கள் கூறினால் மட்டுமே பும்ரா இந்திய அணியில் இருந்து நீக்கப்படுவார்.

பும்ராவுக்கு என்ன நடந்தது? மருத்துவருக்கு பிசிசிஐ அழைப்பு.. சாம்பியன்ஸ் டிராபி குறித்து இறுதி முடிவு!

ஜஸ்பிரித் பும்ராவின் ஸ்கேன் முடிவுகளை மருத்துவர்கள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உள்ள நிலையில், 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் பும்ரா இடம் பெறுவாரா என்பது குறித்து பிசிசிஐ இறுதி முடிவை எடுக்க இருக்கின்றது.

எனினும், பும்ராவால் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் குரூப் சுற்று போட்டிகளில் விளையாட முடியாது என பிசிசிஐ வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகி உள்ளதுடன், எனினும் அவசரப்பட்டு அவரை அணியிலிருந்து நீக்க வேண்டாம் என்ற முடிவில்  பிசிசிஐ உள்ளதாக தெரிகின்றது. 

இன்று வெளியாக உள்ள மருத்துவ அறிக்கையில் போட்டிகளில் விளையாட நீண்ட காலம் ஆகும் என மருத்துவர்கள் கூறினால் மட்டுமே பும்ரா இந்திய அணியில் இருந்து நீக்கப்படுவார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இறுதி கட்ட அணியை பிப்ரவரி 12ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும். அதற்கு மேல் அணியில் மாற்றம் செய்tது என்றால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெக்னிக்கல் கமிட்டியின் அனுமதி பெற வேண்டும்.

எனினும், பிசிசிஐ பும்ராவை அணியிலிருந்து நீக்காமல் இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவதுடன்,  பும்ராவை நாக் அவுட் போட்டிகளில் மட்டும் பயன்படுத்தலாம்.

அத்துடன், பும்ராவுக்கு மாற்று வீரராக ஹர்ஷித் ராணாவை தேர்வு செய்யலாம் என்றும் அதற்காகவே ஹர்ஷித் ராணா தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறார் என்றும் கூறப்படுகின்றது.

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் வேகப் பந்துவீச்சாளர்களாக  அர்ஷ்தீப் சிங் மற்றும் முகமது ஷமி இடம் பெற்றுள்ளனர். ஹர்திக் பாண்டியாவும் வேகப்பந்துவீச்சாளராக செயல்படுவார்.

இதனால், இந்திய அணிக்கு பந்துவீச்சு பிரச்சனை இல்லை என்பதுடன், பும்ராவால் விளையாட முடியாமல் போனாலும் இவர்கள் மூவரை வைத்து இந்திய அணி சமாளித்து விடும்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp