பும்ரா போட்ட மாஸ்டர் பிளான்.. அடி வாங்கிய ஆஸ்திரேலியா.. 38 ரன்னுக்கு 2 விக்கெட்.. நடந்தது என்ன?
முதல் 6 ஓவர்கள் வரை பந்து ஸ்விங் ஆகும் என நினைத்து பும்ரா மற்றும் பிற வேகப் பந்துவீச்சாளர்கள் அதற்கு ஏற்ப பந்து வீசிய நிலையில் இந்திய அணியின் திட்டம் தோல்வி அடைந்தது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு விக்கெட் கிடைக்காமல் இருந்த நிலையில் தனது பந்து வீச்சில் புதிய திட்டத்தை செயல்படுத்திய பும்ரா திருப்புமுனையை ஏற்படுத்தினார். இதை அடுத்து ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
காபா மைதானத்தில் நடந்த முதல் நாள் ஆட்டத்தில் மழையின் காரணமாக 13 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டதுடன், முதல் 6 ஓவர்கள் வரை பந்து ஸ்விங் ஆகும் என நினைத்து பும்ரா மற்றும் பிற வேகப் பந்துவீச்சாளர்கள் அதற்கு ஏற்ப பந்து வீசிய நிலையில் இந்திய அணியின் திட்டம் தோல்வி அடைந்தது.
அதன் பின் பும்ரா பந்துவீச்சு திட்டத்தை மாற்றியதுடன், அடுத்த 7 ஓவர்களில் இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் தங்கள் பந்து வீசும் முறையை மாற்றினர். அப்போது ஆஸ்திரேலிய வீரர்கள் ரன் குவிக்க முடியாமல் திணறினர்.
இந்த நிலையில் இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி தெளிவாக விளையாடியதுடன், பும்ரா பந்தை அதிக தூரம் பிட்ச் ஆகும் வகையில் வீசினார். இதனை அடுத்து உஸ்மான் கவாஜா 21 ரன்கள் எடுத்த நிலையிலும், நாதன் மெக்ஸ்வீனி 9 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டம் இழந்தனர்.
அதன் பின் நிதிஷ்குமார் ரெட்டி, பும்ராவின் அதே பவுலிங் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் பந்து வீசி மார்னஸ் லாபுஷேன் விக்கெட்டை வீழ்த்தினார். அவர் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்ததுடன், ஆஸ்திரேலிய அணி 75 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தமை குறிப்பிடத்தக்கது.