அப்போ ஹர்திக்... இப்போ பும்ரா... ரோஹித் ஷர்மாவுக்கு குழி பறிக்கும் நண்பர்கள்.. ரசிகர்கள் அதிர்ச்சி!
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு ரோஹித் ஷர்மாவையே கேப்டனாக நியமித்துள்ளனர்.
குஜராத் டைடன்ஸ் அணியில் இருந்து, ட்ரேடிங் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்த ஹர்திக் பாண்டியாவுக்கு, உடனே கேப்டன் பதவி வழங்கப்பட்டது.
இதனால், கடும் அதிருப்தியில் ரோஹித் ஷர்மா, இன்னமும் ஹர்திக் பாண்டியாவுக்கு வாழ்த்துகளை கூட சொல்லவில்லை.
இந்நிலையில், ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய டி20 அணிக் கேப்டன் பதவியை மீண்டும் கேட்டுப்பெற்று கைப்பற்றினார் ரோஹித் ஷர்மா.
சமீபத்தில் தென்னாப்பிரிக்கா சென்று டெஸ்ட் தொடரில் பங்கேற்ற இந்திய அணி, முதல் போட்டியில் படுதோல்வியை சந்தித்தபோதும், இரண்டாவது போட்டியில் அதிரடியாக செயல்பட்டு மெகா வெற்றியைப் பெற்றது.
இதனால், இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு ரோஹித் ஷர்மாவையே கேப்டனாக நியமித்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது இங்கிலாந்து பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள ஜஸ்பரீம் பும்ரா, ''டெஸ்டில் மீண்டும் கேப்டனாக செயல்பட விரும்புகிறேன்.
டெஸ்டில் விளையாடுவதுதான் எனக்கு மிகவும் பிடிக்கும். அதிலும், டெஸ்டில் கேப்டனாக செயல்படுவது என்பது பெருமைக்குறிய விஷயம்.
டெஸ்டில் எனக்கு கேப்டன் பதவியை கொடுத்தால், நிச்சயம் வேண்டாம் என சொல்ல மாட்டேன். ஏன் வேண்டாம் என்று சொல்ல வேண்டும்?'' என அதிரடியாக பேசியுள்ளார்.
மேலும், ''ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியை வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ்தான் வழிநடத்தி வருகிறார். டெஸ்டை பொறுத்துவரை, வேகப்பந்து வீச்சாளர்தான் அணிக்காக அனைத்தையும் செய்கிறார்.
திடீரென்று இந்திய அணியிலிருந்து விலகிய கோலி.. இதுதான் காரணமா? நடந்தது என்ன?
வேகப்பந்து வீச்சாளர்கள் புத்திசாலித்தனமான வீரர்கள். அவர்கள் கேப்டனாக இருந்தால், சக வேகப்பந்து வீச்சாளர்களையும் சிறப்பாக வேலை வாங்குவார்கள். வித்தியாசமாக யோசித்து பந்துவீச, சுதந்தரமாகவும் முடிவுகள் எடுக்க முடியும்'' எனக் கூறினார்.
கடந்து முறை இங்கிலாந்து சென்று டெஸ்ட் விளையாடியபோது, ஒரு போட்டிக்கு பும்ரா கேப்டனாக இருந்தார். அப்போது, இங்கிலாந்து பேட்டர்கள் பேர்ஸ்டோ, ஜோ ரூட் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி 316 பந்துகளில் 269 ரன்களை குவித்து வெற்றிக்கு காரணமாக இருந்தார்கள்.
பும்ரா சிறப்பாக செயல்பட்டு 5 விக்கெட்களை கைப்பற்றினார். குறிப்பாக, முதல் இன்னிங்ஸில் 16 பந்துகளில் 31 ரன்களை குவித்து அசத்தினார். ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரு ஓவரில் 29 ரன்களை குவித்து அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.