இந்திய அணிக்கு புதிய கேப்டன்... ஆனால் ஹர்திக் கிடையாதாம்... அஜித் அகார்கர் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்!
டி20 உலகக் கோப்பை 2024 தொடர் முடிந்த உடனே, இந்திய அணிக் கேப்டன் ரோஹித் சர்மா பதவி விலக உள்ளார்.
டி20 உலகக் கோப்பை 2024 தொடர் முடிந்த உடனே, இந்திய அணிக் கேப்டன் ரோஹித் சர்மா பதவி விலக உள்ளார்.
ரோஹித் சர்மாவுக்கு தற்போது 36 வயதாகிறது. இதனால், டி20 உலகக் கோப்பை 2024 தொடர் முடிந்த உடனே, ரோஹித் சர்மாவின் கேப்டன் பதவியை வேறு ஒருவருக்கு கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ இருக்கிறது.
ரோஹித் சர்மாவுக்கு அடுத்து ஹர்திக் பாண்டியா கேப்டன் கிடையாது என்பதை, பிசிசிஐ மறைமுகமாக தெரிவித்துவிட்டது. ஆண்டு ஒப்பந்த பட்டியலில் ஹர்திக் பாண்டியாவை 'ஏ கிரேடில்' மட்டுமே சேர்த்துள்ளனர்.
வழக்கமாக, இந்திய அணிக் கேப்டனாக இருப்பவர்கள் ஏ+ கிரேடில் தான் இடம் பிடிப்பார்கள். தற்போது வெளியாகி உள்ள ஏ+ கிரேட் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பரீத் பும்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இருக்கிறார்கள்.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை முடிந்த பிறகு ஜஸ்பரீத் பும்ராவுக்கு கேப்டன் பதவியை கொடுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பும்ரா இல்லாத நேரங்களில் கே.எல்.ராகுலுக்கு கேப்டன் பதவி வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது. கேப்டன்ஸி விவகாரம் குறித்து நேற்று, பிசிசிஐ மீட்டிங் நடைபெற்றது.
அப்போது, 'ஹர்திக் பாண்டியா அடிக்கடி காயம் காரணமாக ஓய்வுக்கு சென்றுவிடுகிறார். மேலும், தான் சொல்வதை மட்டும்தான் வீரர்கள் கேட்க வேண்டும் என்ற மனநிலையில் அவர் இருக்கிறார்' என்ற காரணங்களை கூறி, அவரை புறக்கணித்துவிட்டார்களாம்.
சமீப காலமாகவே, தனக்கு இந்திய அணிக் கேப்டன் பதவியை கொடுக்க வேண்டும் என பும்ரா, பேட்டிகொடுத்து வந்தார். இந்நிலையில், ரோஹித் சர்மாவுக்கு பிறகு தனக்குதான் கேப்டன் பதவியை கொடுக்க வேண்டும் என பிசிசிஐ நிர்வாகிகளிடம் பும்ரா கூறியிருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியில், ரோஹித் சர்மாவுக்கு அடுத்து சூர்யகுமார், பும்ராவுக்கு கேப்டன் பதவியை தராமல், ஹர்திக்கை டிரேடிங் செய்து, கேப்டன் பதவியை கொடுத்துள்ளனர்.
இதனால், பும்ரா கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், இதனால்தான், இந்திய அணிக் கேப்டன் பதவியை பெற்றே ஆக வேண்டும் என முயற்சித்து வெற்றி கண்டிருப்பதாக தெரிகிறது.
ஜஸ்பரீத் பும்ராவுக்கு தற்போது 30 வயதாகிறது. 35 டெஸ்ட், 89 ஒருநாள், 62 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கும் பும்ரா, அதில் 157, 149, 74 ஆகிய விக்கெட்களை எடுத்துள்ளார்.
120 ஐபிஎல் போட்டிகளில் 145 விக்கெட்களை சாய்த்துள்ளார். அனைத்து பார்மெட்டிலும் இவரது சராசரி 24-க்கும் குறைவாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.