இந்தியா அணிக்கு எதிராக மிகப்பெரும் சாதனை படைத்த ஜோ ரூட்... பெரும் ஜாம்பவான்களால் கூட முடியல!

இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த இங்கிலாந்து அணியின் வீரரான ஜோ ரூட் பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார்.

இந்தியா அணிக்கு எதிராக மிகப்பெரும் சாதனை படைத்த ஜோ ரூட்... பெரும் ஜாம்பவான்களால் கூட முடியல!

இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த இங்கிலாந்து அணியின் வீரரான ஜோ ரூட் பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார்.

ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்திய அணி 2 போட்டியிலும், இங்கிலாந்து அணி 1 போட்டியிலும் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சி மைதானத்தில் நேற்று துவங்கியது. 

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டனான ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணி பென் டக்கட் (11), ஓலி போப் (0) மற்றும் ஜாக் கிராவ்லே (42) ஆகியோர், இந்திய அணியின் அறிமுக வீரரான ஆகாஷ் தீப்பின் பந்துவீச்சில் சிக்கி விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தனர்.

ஒரேயொரு போட்டியில் இரண்டு மெகா சாதனைகளை படைக்க உள்ள ரோஹித் சர்மா... சாதிப்பாரா?

இதன்பின் களமிறங்கிய பாரிஸ்டோ 38 ரன்னிலும், ஸ்டோக்ஸ் 3 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். இதன் மூலம் இங்கிலாந்து அணி 112 ரன்களுக்கே தனது 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.

இதன்பின் கூட்டணி சேர்ந்த ஜோ ரூட் – ஃபோக்ஸ் ஜோடி இங்கிலாந்து அணியை சரிவில் இருந்து மீட்கும் வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பென் ஃபோக்ஸ் 47 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக களமிறங்கிய டாம் கார்டிலி 13 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

இங்கிலாந்து அணியை சரிவில் இருந்து மீட்டு தரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் இங்கிலாந்து அணியின் சீனியர் வீரரான ஜோ ரூட் 226 பந்துகளில் 106* ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தநிலையில், இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம், ஜோ ரூட் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் பல சாதனைகளை படைத்துள்ளார்.

குறிப்பாக இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக தனது 10வது சதத்தை பதிவு செய்த ஜோ ரூட், இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு எதிரான 10 சதங்கள் அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

கிரிக்கெட் உலகின் ஜாம்பவனான விவி ரிச்சர்ட்ஸ் (8 சதம்), ரிக்கி பாண்டிங் (8) உள்ளிட்டோரை பின்னுக்கு தள்ளி ஜோ ரூட் இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

இந்திய அணிக்கு எதிராக ஜோ ரூட் – 10 சதம், ஸ்டீவ் ஸ்மித் – 9 சதம், கேரி சோபர்ஸ் – 8 சதம், ரிச்சர்ட்ஸ் – 8 சதம், ரிக்கி பாண்டிங் – 8 சதம் அடித்து உள்ளனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...