கண்ணீர் விட்டு கதறிய கொல்கத்தா... கடைசி பந்தில் ட்விஸ்ட்.. எகிற வைத்த பட்லர்!

ஒரு கட்டத்தில் 97 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற ராஜஸ்தான் அணி நிலையில் இருந்து 121 ரன்களுக்கு 6 விக்கெட்கள் என்ற அளவிற்கு சரிந்தது. 

கண்ணீர் விட்டு கதறிய கொல்கத்தா... கடைசி பந்தில் ட்விஸ்ட்.. எகிற வைத்த பட்லர்!

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி கடைசி பந்தில் 224 ரன்கள் வெற்றி இலக்கை எட்டி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ராஜஸ்தான் அணியின் வீரர் ஜோஸ் பட்லர் காயத்துடன் 60 பந்துகளில் 107 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் நின்று ராஜஸ்தான் அணியை வெற்றி பெற வைத்தார்.

ஒரு கட்டத்தில் 97 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற ராஜஸ்தான் அணி நிலையில் இருந்து 121 ரன்களுக்கு 6 விக்கெட்கள் என்ற அளவிற்கு சரிந்தது. 

அப்போது ராஜஸ்தான் அணி வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்ற நிலை இருந்தது. ஜோஸ் பட்லரை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் எல்லாம் சில ரன்களில் விக்கெட்களை பறிகொடுத்து இருந்தனர்.

எட்டாவது வரிசையில் இறங்கிய ரோவ்மன் போவெல் 13 பந்துகளில் 26 ரன்கள் குவித்து ராஜஸ்தான் அணியை வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். 

ஆனால், போவெல் ஆட்டமிழந்த பின் ராஜஸ்தான் அணியில் ரன் குவிக்கும் திறன் கொண்ட பேட்ஸ்மேன்கள் யாரும் இல்லை.

அந்த நிலையில் கடைசி மூன்று ஓவர்களில் 46 ரன்கள் தேவை என்ற நிலையில் ஜோஸ் பட்லர் ஒரு பந்தை கூட மற்ற பேட்ஸ்மேனுக்கு கொடுக்காமல் தானே ஆடினார். 

கடைசி மூன்று ஓவரின் 18 பந்துகளையும் அவரே ஆடினார். அவரால் வலியால் சரியாக ஓட முடியவில்லை. அந்த நிலையிலும் 7 ரன்களை ஓடியே எடுத்தார். நான்கு சிக்ஸ், இரண்டு ஃபோர் அடித்தார்.

கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் வருண் சக்கரவர்த்தி வீசிய கடைசி ஓவரின் முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்தார். அதன் பின் ஐந்தாவது பந்தில் 2 ரன்கள் ஓடினார். 

கடைசி பந்தில் ஒரு ரன் தேவை என்ற நிலையில் அதையும் செய்து ராஜஸ்தான் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். 60 பந்துகளில் 107 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp