Close

தண்ணி காற்றை வெச்சித்தான் அரசியல்.. டீசர் ரிலீஸ் !

க/பெ ரணசிங்கம் படத்தின் முதல் பார்வை நேற்று வெளியானதை அடுத்து இன்று அந்த படத்தின் டீஸர் வெளியானது.

இதை அறம் படத்தை தயாரித்த கொட்டபாடி ஜெ ராஜேஷ் இப்படத்தையும் தயாரித்து இருக்கிறார்.

இதில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார், தர்மதுரையை தொடர்ந்து இவர்கள் இருவரும் இப்படத்தில் இணைகின்றனர்.

ரணசிங்கம் படம் உண்மையில் நடந்த சில சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கபட்டது என சொல்லப்படுகிறது.

தண்ணீர், நிலம். காற்று போன்றவற்றில் அப்பாவி மக்களை சுரண்டி கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளையும், கார்பரேட் முதலைகளையும் தனியொரு ஆளாக மக்களின் துணையோடு நின்று போராடும் ஒரு சமூக போராளியாக விஜய்சேதுபதி நடித்திருக்கிறார்.

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து நெறியாளரும் மற்றும் நடிகருமான ரங்கராஜ் பாண்டே இதில் மாவட்ட ஆட்சியராக வருகிறார், கானா படத்தை இயக்கிய அருண்ராஜ் காமராஜா என நமக்கு பரிட்சயமான பல முகங்கள் இதில் நடித்துள்ளனர்.

அதிகாரத்தோட உச்சாணி கொம்புல இருப்பவர்களுக்கு நாம அடிபட்ட வலியை கொஞ்சம் கூட குறையாம அப்படியே புரிய வெக்கணும் என ஐஸ்வர்யா ராஜேஷும் வசனத்தில் அதிரடி காட்டியுள்ளார்.

இந்த படத்தை அறிமுக இயக்குனர் வீரபாண்டி அவர்கள் இயக்கியுள்ளார். நயன்தாரா நடித்த அறம் படத்தை தயாரித்த அதே தயாரிப்பாளர் கொட்டபடி ஜெ ராஜேஷ் அவர்கள் தான் இந்த படத்தையும் தயாரித்துள்ளார்.

டீஸரின் முடிவில் ஐஸ்வர்யா ராஜேஷை குடும்ப அட்டையிலிருந்து பெயரை நீக்கிவிடுவேன் என மிரட்டும் தோணியில் பேசும் அதிகாரியை சும்மா டாரு டாரக கிழித்து தொங்க விடுவார்.

ரணசிங்கத்தின் கோபம் தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு விவசாயிக்குள்ளும் கொதிக்கும் கோபம். மக்கள் இடையே இப்படம் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 Comments
x
scroll to top