மொத்த பேரையும் திரும்பி பார்க்க வைத்த இலங்கை வீரர்.. டெஸ்ட்டில் செய்துள்ள சாதனை!
2024 ஆம் ஆண்டில் மட்டும் அவர் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1049 ரன்கள் எடுத்து உள்ள அவர் மொத்தம் ஐந்து சதம் மற்றும் நான்கு அரை சதங்களை அடித்து இருக்கிறார்.
இலங்கை அணி அபாரமான டெஸ்ட் வெற்றிகளுக்கு முக்கிய காரணமான கமிந்து மென்டிஸ், டான் பிராட்மேனுக்கு நிகரான சில சாதனைகளையும் இந்த வருடத்தில் செய்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆன கமிந்து மென்டிஸுக்கு ஒரு போட்டிக்கு பின் போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 2024 ஆம் ஆண்டு அவருக்கு இலங்கை டெஸ்ட் அணியில் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்பட்டது.
கமிந்து மென்டிஸ் தான் ஆடிய முதல் 8 டெஸ்ட் போட்டிகளிலும் 50 ரன்கள் அடித்து உலகிலேயே எந்த வீரரும் செய்யாத அரிய சாதனையை செய்தார். அவர் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 1110 ரன்கள் எடுத்து இருக்கிறார். அவரது பேட்டிங் சராசரி 74 ஆக உள்ளது.
2024 ஆம் ஆண்டில் மட்டும் அவர் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1049 ரன்கள் எடுத்து உள்ள அவர் மொத்தம் ஐந்து சதம் மற்றும் நான்கு அரை சதங்களை அடித்து இருக்கிறார்.
தான் விளையாடிய பத்து போட்டிகளில் ஐந்து சதங்கள் அடித்து கிரிக்கெட் உலகை திரும்பிப் பார்க்க வைத்து இருக்கிறார் கமிந்து மென்டிஸ். 2024 ஆம் ஆண்டின் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்களில் ஜெய்ஸ்வால் மற்றும் ஹாரி ப்ரூக் ஆகியோரோடு கமிந்து மென்டிஸ்-க்கும் முக்கிய இடம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.