Wednesday, January 29, 2020.
Home இலங்கை காஷ்மீர் விவகாரம்: பிரான்ஸின் உதவியை நாடியது பாகிஸ்தான்

காஷ்மீர் விவகாரம்: பிரான்ஸின் உதவியை நாடியது பாகிஸ்தான்

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசாங்கம் ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்தியாவுடனான தனது தூதரக மற்றும் வர்த்தக உறவுகளை முறித்துக் கொண்ட பாகிஸ்தான் இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் கவனத்தை திருப்ப முயன்றது.

இதனையடுத்து சீனாவின் உதவியோடு காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா பாதுகாப்பு சபையிடம் பாகிஸ்தான் அரசாங்கம் முறையிட்டது.

ஆனால் ஐ.நா பாதுகாப்பு சபையின் நான்கு நிரந்தர உறுப்பு நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்காததால் பாகிஸ்தானின் முயற்சி தோல்வியடைந்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி, காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினரான பிரான்ஸின் உதவியை நாடும் விதமாக பிரான்ஸ் வெளியுறவு துறை அமைச்சர் ஜீன் யேவ்ஸ் லெட்ரியனிடம் தொலைபேசியில் உரையாடினார்.

இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தொலைபேசி உரையாடலின் போது, சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை மீறி இந்திய அரசாங்கம் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததையும், இதனால் ஜம்மு-காஷ்மீர் பகுதியில் அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதையும் பாகிஸ்தான் தரப்பில் எடுத்துரைத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கு, பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் லெட்ரியன், இரு நாடுகளையும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறும், இந்த விவகாரம் தீவிரமடையாமல் இருப்பதை இரு நாடுகளும் உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதயும் பாருங்க...

வானம் கொட்டட்டும் டிரெய்லர் அழகு!

“கோபத்தையும் ரோஷத்தையும் விட்டுட்டு நிக்குற ஆளுங்க நாங்க இல்லை. என் அப்பன், பாட்டன், பூட்டனெல்லாம் அந்த மாதிரிதான். நாளைக்கு என் புள்ளையும் அந்த மாதிரிதான்” என்ற வசனத்துடன் தொடங்குகிறது வானம் கொட்டட்டும் திரைப்படத்தின்...

அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் – பலி எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு

சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. நோய் பரவாமல் தடுக்கும் வகையில் நீண்ட தூர பயணங்களை தவிர்க்கும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தல். ஏராளமான நோயாளிகள் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை...

பட்டதாரிகளுக்கு தொழில் வழங்க நேர்முகத்தேர்வு

எதிர்வரும் மாதமளவில் பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கான நேர்முகத்தேர்வு ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த...

யாழ். மாநகர சபையின் சுகாதார ஊழியர்கள் உண்ணாவிரதம்

கடந்த இரண்டு நாட்களாக பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்த யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார ஊழியர்கள், இன்று (24) தொடர்ச்சியான உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். நான்கு அம்சக் கோரிக்கையை முன்வைத்து நேற்று முன்தினம் ஆரம்பித்த...

ஆன்மீகம்

பொங்கலோ பொங்கல்…! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கலோ பொங்கல்...! இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்சபூதங்களை உள்ளடக்கிய பிரபஞ்சத்தில் வாழும் உயிரினங்கள் அனைத்துக்கும் முதல் தெய்வம் இயற்கை தான் என்று சொல்வார்கள். அந்த வகையில் உலகை...

காணிக்கை செலுத்துவதன் மூலம் இறைவனின் அருளை முழுமையாக பெற்றுவிட முடியுமா?

நமக்கு நன்மை நடக்க வேண்டும் என்பதற்காக அந்த இறைவனை நினைத்து பூஜை புனஸ்காரங்கள் மேற்கொள்வதை நாம் வழக்கமாக வைத்துள்ளோம். வேண்டுதல்கள் அந்த இறைவனின் காதில் விழுவதற்காக பலவகையான காணிக்கைகளையும் கூட நாம் செய்வோம். ஆனாலும்...

ஏகாதசி விரதம்! முக்கியமான 30 தகவல்கள்!

ஒவ்வொரு ஏகாதசி விரத தன்மையும், ஒவ்வொரு விதமான பலன்களைத் தர வல்லது. ஒவ்வொரு ஏகாதசியும் பொதுவான நற்பயன்களை அளிப்பதோடு ஒரு தனிப்பயனும் அளிக்கவல்லது என்பதை உணர வேண்டும். மனிதர்களின் வாழ்நாளை நான்கு நிலைகளாக பிரம்மசர்யம்,...

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. முதல் நாள் அன்றே திரளான பக்தர்கள் 18 ஆம் படியேறி சாமி தரிசனம் செய்தனர். கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை கோயில் நடை...