தென்னாபிரிக்காவில் ஆவணப்பட இயக்குநர் எடுத்த உலகையே உலுக்கியுள்ள, கொல்லப்பட்ட யானையின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

தென்னாபிரிக்காவில் உள்ள போட்ஸ்வானா பகுதிக்கு சென்ற ஆவணப்பட இயக்குநர் ஜெஸ்டின் சுல்லின், தனது ட்ரோன் கமராவை வைத்து படம் பிடித்தார்.

அவ்வாறு அவர் படம் பிடித்த ஒரு புகைப்படம் தற்போது உலகையே அதிர வைத்துள்ளது. யானை ஒன்று முகம் சிதைக்கப்பட்ட நிலையில் தும்பிக்கை தனியாக வெட்டி வீசப்பட்ட நிலையில் இறந்து கிடந்த புகைப்படம் தான் ஜெஸ்டினின் கேமரா பதிவு செய்தது.

இங்கிலாந்தின் மெட்ரோ பத்திரிக்கை இது தொடர்பான செய்தி வெளியிட்டுள்ளது. டிஸ்கனஷன் என்ற தலைப்பு கொடுக்கப்பட்ட அந்த யானையின் புகைப்படம் தற்போது ஆண்டரி ஸ்டெனின் சர்வதேச பத்திரிக்கை புகைப்பட போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளது.

அந்த புகைப்படம் பார்ப்பவர்களையும் கலங்க செய்துள்ளது. 2014 முதல் 2018ம் ஆண்டிற்குள் உடல் பாகங்ளுக்காக விலங்குகள் கொல்லப்படுவது 593 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.