வம்பிழுத்த தென்னாப்பிரிக்க வீரர்.. பதிலுக்கு கேஎல் ராகுல் செய்த விஷயம்.. இந்த அசிங்கம் தேவையா.!
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா கேப்டன்ஷிப்பில் இருந்து சற்று வித்தியாசமாக செயல்படுபவர் கே.எல் ராகுல்.
செஞ்சூரியனில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில், முதல் நாளில் இந்திய அணி 8 விக்கெட்டுக்கு 208 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரோகித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், மற்றும் சுப்மன் கில் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றினார்கள்.
விராட் கோலி, மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் சிறிய பங்களிப்பு அளித்தாலும் பெரிதாக ரன் அடிக்கவில்லை. ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஏமாற்றிய நிலையில், ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் இந்திய அணிக்கு தனது சிறிய பங்களிப்பை அளித்தார்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக, களம் இறங்கிய கே.எல் ராகுல் நிதானமாக விளையாடி அரை சதம் அடித்தார். மேலும் இந்திய அணி 200 ரன்களை கடக்க, கடைசி வரிசை வீரர்களான ஜஸ்பிரித் பும்ரா, மற்றும் முகமது சிராஜுடன் இணைந்து ஆட்டமிழக்காமல் 70 ரன்களை குவித்து களத்தில் உள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், 2014ஆம் ஆண்டு, தனது முதல் போட்டியில் விளையாடிய கே.எல் ராகுல், அந்தப் போட்டியில், முதல் இன்னிங்ஸில் ஆறாவது இடத்தில் களம் இறங்கினார்.
அதன் பிறகு, ஓபனிங் மற்றும் மிடில் ஆர்டரில் களம் கண்ட கே.எல் ராகுல், தனது 48வது டெஸ்ட் போட்டியில் மீண்டும் ஆறாவது வரிசையில் விளையாடி, 14-வது அரைசதத்தைப் பதிவு செய்தார். இதே மைதானத்தில் இதற்கு முன்பு விளையாடிய போது சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா கேப்டன்ஷிப்பில் இருந்து சற்று வித்தியாசமாக செயல்படுபவர் கே.எல் ராகுல். அதற்கு முக்கிய காரணம் அவரது குணம். பொதுவாக களத்தில் புன்னகையை மட்டும் வெளிப்படுத்துபவர் கே.எல் ராகுல்.
தொடக்கத்தில் இந்திய அணிக்கு கேப்டனாக கே.எல் ராகுல் செயல்படும்போது, களத்தில் அவரது செயல்பாடுகள் பற்றி சில கேள்விகள் எழுந்தாலும், அண்மையில் நடைபெற்ற முடிந்த சவுத் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை வென்று, அதற்கெல்லாம் தனது வெற்றியின் மூலம் பதில் அளித்துள்ளார்.
இந்தியா சொதப்ப இதுதான் காரணம்: ஒரு இன்ச்சால் அடுத்தடுத்து விக்கெட் இழந்த இந்தியா !
தற்போது நடைபெற்று வரும் சமுதல் டெஸ்ட் போட்டியில், தன்னிடம் வம்பு இழுத்த சவுத் ஆப்பிரிக்கா பவுலருக்கு, அவரது பாணியில் புன்னகை செய்து தக்க பதிலடி தந்தார் கே.எல் ராகுல். பொறுப்புடன் விளையாடி வந்த கே.எல் ராகுல், 39வது ஓவரில் மார்கோ ஜான்சன் பந்துவீச்சில் சில பௌண்டரிகளை விலாசினார்.
மீண்டும் 45வது ஓவரை வீசிய மார்கோ ஜான்சனின், முதல் பந்தை சிக்ஸர்க்கு அனுப்பினார் கே எல் ராகுல். விக்கெட் கைப்பற்ற முடியாத விரக்தியில் இருந்த மார்கோ ஜான்சன், எக்ஸ்ட்ரா கவர் திசையில் அடிக்கப்பட்ட சிக்சரால் மேலும் கோபம் அடைந்து, அடுத்த பந்தில் கே.எல் ராகுல் அருகில் சென்று வார்த்தை போரில் ஈடுபட்டார்.
ஆனால் கே.எல் ராகுல், தனது வழக்கமான புன்னகையால் அதற்கு பதில் அளித்தார். பதிலுக்கு கே.எல் ராகுல் வார்த்தை போரில் ஈடுபடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், அந்தப் புன்னகை, மார்கோ ஜான்சனை, என்ன செய்வதென்று அறியா வண்ணம் அசிங்கப்படுத்தியதுடன் ஆச்சரியப்படுத்தியது.
கே.குல் ராகுல் மார்கோ ஜான்சனை பார்த்து புன்னகைக்கும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.