ராகுலால் இந்திய அணியில் 3 பேருக்கு ஆபத்து.. குட்டி கோலிக்கு இடமில்லை!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பு தனது கடைசி டி20 தொடரை விளையாட உள்ளது.

ராகுலால் இந்திய அணியில் 3 பேருக்கு ஆபத்து.. குட்டி கோலிக்கு இடமில்லை!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பு தனது கடைசி டி20 தொடரை விளையாட உள்ளது.

மேலும், உலகக்கோப்பை தொடருக்கு நல்ல பயிற்சிகளமாக ஐபிஎல் போட்டிகள் அமையும் என்று கிரிக்கெட் ஜாம்பவான்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், ரோகித் சர்மா, விராட் கோலி, கே எல் ராகுல் ஆகியோர் டி20 இந்திய அணியில் கடந்த ஒரு ஆண்டுக்கு மேல் விளையாடாமல் உள்ள நிலையில் இவர்கள் 3 பேரும் அணிக்கு திரும்ப அதிக வாய்ப்பு உள்ளது.

கே எல் ராகுல் டி20 அணிக்கு திரும்பினால் பிளேயிங் லெவனில் மூன்று வீரர்களுக்கு ஆபத்து இருப்பதாக எச்சரிக்கப்படுகின்றது.

டி20 போட்டிகளில் தொடக்க வீரராக கே எல் ராகுல் களமிறங்கக்கூடியவர். மேலும் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பர் ஆகவும் இடம் பெற்றிருக்கிறார். 

அடுத்த கோலி என்று அழைக்கப்பட்ட கில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினாலும், அதே போன்ற ஒரு ஃபார்மை அவரால் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து வெளிப்படுத்த முடியவில்லை. 

இதன் காரணமாக கில்லின் இடம் ஏற்கனவே கேள்விக்குறியாக இருக்கிறது. கில் இடத்தில் ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் போன்ற வீரர்களை பரிசீலனை செய்ய பிசிசிஐ தொடங்கி விட்டது.

இந்த நிலையில் கே எல் ராகுல் அணிக்கு திரும்பினால் அவரும் ரோகித் சர்மாவும் தான் தொடக்க வீராக களமிறங்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

இதேபோன்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக ஜித்தேஷ் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பு இருந்தது. ஆனால் கே எல் ராகுல் என்ற விக்கெட் கீப்பர் இடம்பெற்றால் இவர்களுடைய தேவை இல்லாமல் போய்விடும். 

இதேபோன்று ராகுலை மூன்றாவது அல்லது நான்காவது வீரராக ரோகித் சர்மா பயன்படுத்தினால், இஷான் கிஷன் இடத்திற்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp