ராகுலுக்கு அவுட் கொடுத்தது சரியா, தவறா? ரசிகர்கள் ஆதங்கம்... விதிமுறை இதுதான்!
அந்த பந்தை விக்கெட் கீப்பர் அலேக்ஸ் ஹேரி பிடித்தார். உடனே, ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் கொண்டாட ஆரம்பித்தார்கள். இருப்பினும், கள நடுவர் அவுட் கொடுக்கவில்லை.
இந்தியா, ஆஸ்திரேலியான முதல் டெஸ்ட் போட்டியில், கே.எல்.ராகுல் பேட்டிங் செய்து வந்தபோது, மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தை, ராகுல் தடுப்பாட்டத்தில் ஆட முயன்றபோது, எட்ஜ் ஆனதுபோல் ஒரு சத்தம் கேட்டது.
அந்த பந்தை விக்கெட் கீப்பர் அலேக்ஸ் ஹேரி பிடித்தார். உடனே, ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் கொண்டாட ஆரம்பித்தார்கள். இருப்பினும், கள நடுவர் அவுட் கொடுக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து, உடனே ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் டிஆர்எஸ் எடுத்த நிலையில், அப்போது இதனை சோதித்து பார்த்த மூன்றாம் நடுவர், போதிய வீடியோ காட்சிகள் ஆதரம் கிடைக்கவில்லை எனக் கூறி இறுதியில், அவுட் என அறிவித்தார். இதனால், ராகுல் 26 (74) அதிருப்தியுடன் நடையைக் கட்டும் நிலை ஏற்பட்டது.
விதிமுறை என்ன?
ராகுல் அந்த பந்தை, பேட்டால் தொடவே இல்லை. பந்திற்கும், பேட்டிற்கும் இடைவேளை இருக்கிறது. அவரது பேட், அவரது கால்பேடில் பட்டபோதுதான், ஸ்பைக் கோடுகள் டிஆர்எஸில் தெரிந்தது. இதனை மற்றொரு ஆங்கிலில் பார்த்திருந்தால், துல்லியமான உண்மை தெரிந்திருக்கும். ஆனால், அந்த ஆங்கிலில் கேமரா வைக்கப்படாததால், துல்லியமாக இது அவுட்டா, நாட் அவுட்டா எனத் தெரியவில்லை.
இந்நிலையில், பேட் பேடில் படுவதற்கு முன்பே, சில ஸ்பைக் கோடுகள் டிஆர்எஸில் தெரிந்ததால், அதன் அடிப்படையில் நடுவர் அவுட் கொடுத்தார். ஆனால், பல கேமரா ஆங்கில்களில் பேட், பந்தில் உரசாமல் பேட், கால்பேட் உரசியதுபோல்தான் தெரிந்தது. இப்படியிருக்கையில், துல்லியமான ஆதரம் கிடைக்காதபோதும் நடுவர் அவுட் அறிவித்தது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பொதுவாக, மூன்றாவது நடுவர்களுக்கு துல்லியமான ஆதரம் கிடைக்கவில்லை என்றால், கள நடுவர் அளித்த தீர்ப்பை அப்படியே அறிவிக்க சொல்வார். ஆனால், இப்போட்டியில் போதிய ஆதாரம் கிடைக்காத போதும், அவுட் என மூன்றாம் நடுவர் அறிவித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.