ராகுலை போல ரிஷப் பண்ட்டையும் திட்டினாரா சஞ்சீவ் கோயங்கா.. அறையில் நடந்தது என்ன?

லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டிடம் மைதானத்திலேயே வைத்து பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் மற்றும் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா பேசினர். 

ராகுலை போல ரிஷப் பண்ட்டையும் திட்டினாரா சஞ்சீவ் கோயங்கா.. அறையில் நடந்தது என்ன?

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் லக்னோ அணியை,  ஹைதராபாத் அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நிலையில், அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கொயங்கா, அந்த அணியின் கேப்டனாக இருந்த கே. எல். ராகுலை மைதானத்திலேயே கடுமையாக சாடினார்.

இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சர்ச்சையாக மாறியதுடன், கே.எல்.ராகுல் அந்த அணியை விட்டு வெளியேறிய பின்னர் மெகா ஏலத்தில் டெல்லி அணியால் வாங்கப்பட்டார். 

கே.எல்.ராகுலின் இடத்தை நிரப்ப லக்னோ அணி ரிஷப் பண்ட்டை 27 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியதுடன், மிகப்பெரிய தொகை கொடுத்ததால் மற்ற நல்ல பந்து வீச்சாளர்களை லக்னோ அணியால் வாங்க முடியவில்லை. 

இந்த நிலையில், மார்ச் 24ஆம் தேதி டெல்லி அணிக்கு எதிரான  போட்டியில் லக்னோ அணி  முதலில் பேட்டிங் செய்து 209 ரன்கள் எடுத்ததுடன், டெல்லி அணி 19.3 ஓவர்களில் 211 ரன்கள் எடுத்து 1 ரன் வித்தியாசத்தில் வென்றது. 

இந்த நிலையில், லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டிடம் மைதானத்திலேயே வைத்து பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் மற்றும் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா பேசினர். 

இதனையடுத்த, இந்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் கே. எல். ராகுலை சாடியது போல ரிஷப் பண்ட்டை சஞ்சீவ் கோயங்கா திட்டினாரா என ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். 

எனினும், போட்டி முடிந்தவுடன் வீரர்களின் டிரஸ்ஸிங் ரூமுக்கு சென்ற சஞ்சீவ் கோயங்கா, வீரர்களுடன் பேசி இருக்கிறார். போட்டி ஏமாற்றத்தை கொடுத்திருந்தாலும் சில நல்ல விஷயங்களும் நடத்து இருப்பதாகவும்  அதை மட்டும் எடுத்துக்கொள்ள விரும்புவதாகவும் கூறி உள்ளார்.

நமது அணி இளம் வீரர்களை கொண்ட அணி. எனவே நல்ல விஷ்யங்களை மட்டும் எடுத்துக்கொண்டு அடுத்தப்போட்டிக்கு தயாராவோம் என்றும் அந்த போட்டியில் வெற்றி பெறுவோம் என எதிர்பார்ப்போம் என வீரர்களுடன் உரையாடி உள்ளார். 

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி அடுத்தப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.