மீண்டும் உச்சத்திற்கு வந்த கோலி.. கேஎல் ராகுலுக்கு ஆப்பு!
ஐபிஎல் தொடரில் அதிக முறை 600 ரன்களுக்கு மேல் குவித்த வீரர்களின் பட்டியலில் கேஎல் ராகுலின் சாதனையை விராட் கோலி சமன் செய்து உள்ளார்.
ஐபிஎல் தொடரில் அதிக முறை 600 ரன்களுக்கு மேல் குவித்த வீரர்களின் பட்டியலில் கேஎல் ராகுலின் சாதனையை விராட் கோலி சமன் செய்து உள்ளார்.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 46 பந்துகளில் 6 சிக்ஸ், 7 பவுண்டரி உட்பட 92 ரன்கள் எடுத்த நிலையில், இந்த ஐபிஎல் தொடரில் 600 ரன்களுக்கு மேல் குவித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இதுவரை 12 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள விராட் கோலி ஒரு சதம், 5 அரைசதம் உட்பட 634 ரன்களை விளாசியதுடன், இதன் மூலமாக ஆரஞ்ச் கேப் போட்டியில் விராட் கோலி முதலிடத்திலேயே உள்ளார்.
இதுவரை ஐபிஎல் தொடரில் ஒரே சீசனில் 600 ரன்களுக்கு மேல் அடித்த வீரர்கள் பட்டியலில் 4 முறை 600 ரன்களுக்கு மேல் சேர்த்து கேஎல் ராகுல் முதலிடத்தில் இருந்தார்.
இப்போது, அந்த சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார். 2013ஆம் ஆண்டு விராட் கோலி 634 ரன்களையும், 2016ஆம் ஆண்டு 973 ரன்களையும், 2023ஆம் ஆண்டு 639 ரன்களையும் விளாசி இருக்கிறார்.
இந்த பட்டியலில் கிறிஸ் கெய்ல் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் தலா 3 முறை 600 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும், ஆர்சிபி அணியின் கேப்டன் டூ பிளசிஸ் 2 முறை 600 ரன்களுக்கு மேல் விளாசி 3வது இடத்திலும் உள்ளனர்.