50ஆவது சதம் அடித்து சாதித்த உடனே சச்சினுக்காக கோலி செய்த மரியாதை.. முத்த மழை பொழிந்த மனைவி!
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரை இறுதி ஆட்டத்தில் விராட் கோலி தன்னுடைய ஐம்பதாவது சதத்தை பூர்த்தி செய்து சாதனை படைத்தார்.
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரை இறுதி ஆட்டத்தில் விராட் கோலி தன்னுடைய ஐம்பதாவது சதத்தை பூர்த்தி செய்து சாதனை படைத்தார்.
பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி பின்னர் அதிரடியை காட்டினார். 59 பந்துகளில் 50 ரன்கள் விராட் கோலி சேர்த்தார். அப்போது நான்கு பவுண்டரிகள் மட்டும் தான் அடித்து இருந்தார்.
அதன் பிறகு மொத்தமாக 106 பந்துகளில் 100 ரன்கள் சேர்த்தார். இதில் எட்டு பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும்.
இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சச்சின் சாதனையை முறியடித்து விராட் கோலி முதலிடத்தை பிடித்தார். அது மட்டுமல்லாமல் உலக கிரிக்கெட்டிலே முதல் முறையாக 50 சதம் அடித்த வீரர் என்ற பெருமையும் விராட் கோலிக்கு கிடைத்தது.
சதம் அடித்த பிறகு நேரடியாக சச்சின் சென்று தலை குனிந்து வணங்கினார். அப்போது இந்த மரியாதையை ஏற்றுக் கொண்ட சச்சின் கைத்தட்டி உற்சாகப்படுத்தினார்.
தன்னுடைய ஹீரோ சச்சின் ரெக்கார்டை முறியடித்த பிறகு அதனை கொண்டாடாமல் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக விராட் கோலி நடந்து கொண்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அதன் பிறகு தன்னுடைய மனைவி பக்கம் திரும்பிய விராட் கோலி மனைவிக்கும் முத்தம்(சைகை) கொடுத்தார்.
ஆனால் அதற்குள் மனைவி அங்கிருந்து எழுந்து நின்று பல பறக்கும் முத்தங்களை வழங்கினார். இதனை விராட் கோலி ஏற்றுக்கொண்டு சிரித்தார்.