ஊடக அறம், உண்மையின் நிறம்!

வாங்க பார்க்கலாம் கோமாளி விமர்சனம்

நடிகர் ஜெயம் ரவி, சிறப்பான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது இவரது நடிப்பில் கோமாளி படம் வெளியாகியுள்ளது.

இவரது படத்தை குறும் பட இயக்குனரான பிரதீப் ரங்கநாதன் என்பவர் இயக்கியுள்ளார்.

கதைக்களம்

16 வருடமாக கோமாவில் இருந்த ஒரு 90s கிட் திடீரென்று தற்போது நவீன உலகத்தில் கண்முழித்து பார்க்கும்போது அவர் காணும் மாற்றங்களை எப்படி எதிர்கொள்கிறார். மேலும், 90ஸ் கால கட்டத்தில் அவர் வாழ்ந்த வாழ்க்கையை தற்போது 2கே வாழும் வாழ்க்கை முறையையும் எப்படி அவருக்கு மாற்றத்தையும் வலியை ஏற்படுத்துகிறது என்பதுதான் இந்த படத்தின் ஒரு வரி.

படத்தின் ஹீரோவான ஜெயம் ரவி 19 வருடமாக கோமாவில் இருந்துவிடுகிறார் அதன் பின்னர் இன்றைய காலகட்டத்தில் கண்விழித்து பார்க்கும் ஜெயம்ரவிக்கு தான் சிறு வயதில் அனுபவித்த பல விஷயங்கள் எதுவும் தற்போது இல்லை என்பது தெரியவர அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கிறார்.

90 காலகட்டங்களில் 90 ஸ் கிட்ஸ் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை நம் கண்முன்னே கொண்டு வருகிறது இந்த படம். இறுதியில் நவீனமயமாக்கப்பட்ட உலகத்தில் நாம் எவற்றையெல்லாம் இழந்துள்ளோம் என்பதை உணர்த்தியுள்ளது இந்த படம். அதனை
காதல், காமெடி, சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த ஒரு படமாக இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் 90ஸ் கிட்ஸ்சாக வரும் ஜெயம்ரவி சிறுவயதில் தான் தொலைத்த பல்வேறு விஷயங்களை தற்போது தேடி அலையும் காட்சிகள் அற்புதம். அந்த காட்சிகளில் நவீனம் என்ற பெயரில் நாம் எவற்றையெல்லாம் துளைத்துள்ளோம் என்பது நமக்கு உணரவைக்கிறது.

ஆனால், இவை அனைத்தையும் கொஞ்சம் சுவாரசியம் இல்லாத திரைக்கதையுடன் எடுத்துள்ள தான் இந்த படத்தின் ஒரு மைனஸ்.
படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் ஜெயம் ரவி 90 ஸ் கிட்ஸ்சாக பள்ளி பருவ பையனான வரும் காட்சிகள். ஜெயம் ரவி செய்யும் சில குறும்பு காட்சிகள் சிரிக்க வைக்கிறது. அவருக்கு போட்டியாக யோகி பாபு இந்த படத்தில் வேற லெவலில் காமெடி செய்துள்ளார். படத்தின் பி ஜி எம்மில் ஹிப் ஹாப் ஆதி கொஞ்சம் மென்கெட்டுள்ளார்.

படம் கொஞ்சம் மெதுவாக தான் நகர்கிறது – ஒரு சில காட்சி எப்போதும் முடியும் என்று தோன்றுகிறது – கடைசி 10 நிமிடம் மெசேஜ் சொல்லி கொஞ்சம் போர் அடித்து விடுகிறார் ஜெயம் ரவி – ஹிப் தமிழா பிஜிஎம்மில் மெனெக்கெட்ட அளவிற்கு பாடல்களில் மெனக்கெடவில்லை. அதே கிண்ணற்றிற்குள் இருந்து இசையை வசிப்பது போல தான் பாடல்கள் நமக்கு கேட்கிறது.

நிமிர்ந்து நில் தனி ஒருவன் போன்ற படங்களில் சீரியசாக சோசியல் மெசேஜ் சொல்லி வந்த ஜெயம் ரவி, இந்த படத்தில் அதே போன்ற ஒரு சோஷியல் மெசேஜை காமெடியாக கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.