ஜெயம் ரவி நடித்த ‘கோமாளி’ திரைப்படம் இன்னும் இரண்டு நாட்களில் வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்திற்கான புரமோஷன் ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகிறது..

இந்த நிலையில் ‘கோமாளி’ திரைப்படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படம் சுமார் 143 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 23 நிமிடங்கள் ஓடும் ரன்னிங் டைமை கொண்டுள்ளது.

ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யூக்தா ஹெக்டே, கேஎஸ் ரவிகுமார், யோகிபாபு, உள்ளிட்ட பலர் நடித்துள்ளஇந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ளார்.

ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையில் ரிச்சர்ட் நாதன் ஒளிப்பதிவில் பிரதீப் ராகவ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.