பிசிசிஐ எடுத்த தீர்மானத்தால் ரோஹித் அணிக்கு முதல் ஆப்பு... இஷான் கிஷனால் ஏற்பட்ட நிலை!
கடந்த சில வாரங்கள் முன்பு நடந்த தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் கே எல் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். ஆனால், அவர் முழு நேர விக்கெட் கீப்பர் இல்லை.
இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி, பங்கேற்க உள்ளது.
இந்த நிலையில், தொடருக்கான விக்கெட் கீப்பர் யார் என்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.
இந்திய ஆடுகளங்களில் டெஸ்ட் போட்டிகளில் கே எல் ராகுல் விக்கெட் கீப்பராக சரியாக செயல்பட மாட்டார் எனக் கருதி ஸ்ரீகர் பாரத் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டார்.
ஆனால், பாரத் கடந்த ஓராண்டில் பேட்டிங்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான நான்கு நாள் டெஸ்ட் போட்டியில் அவர் 13 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
அத்துடன், ஒரு டெஸ்ட் போட்டியில் வெறும் 13 பந்துகள் மட்டுமே நின்று இருக்கிறார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மூன்று போட்டிகளில் 5 இன்னிங்க்ஸ்களில் 57 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார்.
கடந்த சில வாரங்கள் முன்பு நடந்த தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் கே எல் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். ஆனால், அவர் முழு நேர விக்கெட் கீப்பர் இல்லை.
தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் முதலில் இஷான் கிஷன் தான் அணியின் மாற்று விக்கெட் கீப்பராக இருந்தார். ஆனால், மனச் சோர்வால் அணியில் இருந்து விலகினார்.
அவரை இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தேர்வு செய்து இருக்கலாம் என்றாலும், அவர் மீது டிராவிட், ரோஹித் சர்மா ஆகியோருக்கு அதிருப்தி இருப்பதாக கூறப்படுகிறது.
அதனால், பாரத்துக்கு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. ஆனால், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இதுவே இந்திய அணிக்கு முதல் அடியாக பார்க்கப்படுகிறது.