87 பந்துகளில் 158 ரன்கள் விளாசிய குசல் மெண்டீஸ்.. இருந்தும் அதிர்ச்சி தோல்வியை தழுவிய இலங்கை

இதில் 19 பவுண்டரிகளும் ஒன்பது சிக்ஸர்களும் அடங்கும். குசால் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் இருந்ததால் அவர் ரிட்டையர் அவுட் ஆனார். இதனை அடுத்து 46.2 ஓவரில் இலங்கை அணி 294 ரன்கள் அனைத்து விக்கெட் களையும் இழந்தது.

87 பந்துகளில் 158 ரன்கள் விளாசிய குசல் மெண்டீஸ்.. இருந்தும் அதிர்ச்சி தோல்வியை தழுவிய இலங்கை

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் இலங்கை அணி அதிர்ச்சி தோல்வியை தழுவி இருக்கிறது. 

கவுகாத்தியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இலங்கை அணியில் திமுத் கருணரத்ன 8 ரன்களில் ஆட்டம் இழக்க நிசாங்க 30 ரன்களில் வெளியேறினார். 

சமர விக்ரம 39 ரன்களிலும், அசலங்க 12 ரன்களிலும் தனஞ்செய டி சில்வா 22 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். ஒரு முனையில் விக்கெட்டுகள் இழந்தாலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய குசல் மெண்டிஸ் 87 பந்துகளில் 158 ரன்கள் விளாசினார்.

இதில் 19 பவுண்டரிகளும் ஒன்பது சிக்ஸர்களும் அடங்கும். குசால் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் இருந்ததால் அவர் ரிட்டையர் அவுட் ஆனார். இதனை அடுத்து 46.2 ஓவரில் இலங்கை அணி 294 ரன்கள் அனைத்து விக்கெட் களையும் இழந்தது.

இதனை அடுத்து மழைக் குறிக்கிட்டதால் ஆட்டம் 42 ஓவராக மாற்றப்பட்டு ஆப்கானிஸ்தானுக்கு இலக்கு 257 ரன்கள் ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதன் அடுத்து தொடக்க வீரராக களம் இறங்கிய இப்ராஹீம் சாட்ரான் 7 ரன்களில் ஆட்டம் இழக்க முகமது நபி 1 ரன்னில் வெளியேறினார்.

59 பந்தில் 90 ரன் குவித்த பாபர் அசாம்.. பரபரப்பை ஏற்படுத்திய போட்டி

இதை அடுத்து நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தொடக்க குர்பாஸும் ரஹ்மத் ஷாவும் அதிரடியாக விளையாடி இலங்கை அணியின் பந்துவீச்சை திணறடித்தனர். இவர்களது ஜோடியை பிரிக்க முடியாமல் இலங்கை வீரர்கள் தடுமாறினர்.

குர்பாஷ் 92 பந்துகளில் 119 ரன்களை விளாசினார். இதில் 8 பவுண்டரிகளும் ஒன்பது இமாலய சிக்சர்களும் அடங்கும். இதேபோன்று ரஹமத் ஷா 82 பந்துகளில் 93 ரன்கள் குவித்தார்.

இதில் 10 பவுண்டரிகளும் மூன்று சிக்ஸர்களும் அடங்கும். இதன் மூலம் 38. 1 ஓவரில் எல்லாம் ஆப்கானிஸ்தான அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து 261 ரன்கள் சேர்த்தது.

பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் இலங்கையை வீழ்த்தி இருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. இலங்கையின் பந்துவீச்சில் கசுன் ரஜித மட்டும் ஏழு ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp