ஆட்டத்தில் சொதப்பினாலும், கோலி தான் ஹீரோ.. இலங்கை வீரர் செய்த செயல்!
27 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை அணியானது இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றி புதிய வரலாறு படைத்துள்ளது.
27 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை அணியானது இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றி புதிய வரலாறு படைத்துள்ளது.
இந்த ஒருநாள் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை தவிர்த்து அனைத்து பேட்ஸ்மேன்களும் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார்.
முதல் போட்டியில் 24 ரன்களிலும், 2வது ஒருநாள் போட்டியில் 14 ரன்களிலும், கடைசி ஒருநாள் போட்டியில் 20 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறிய இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலியின் ஆட்டம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
3 ஒருநாள் போட்டிகளிலும் சேர்த்து விராட் கோலி மொத்தமாக 58 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளதுடன், இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி ஒரு அரைசதம் கூட அடிக்காமல் முதல்முறையாக திரும்பி சென்றுள்ளார்.
அறிமுகமான காலத்தில் இருந்தே, இலங்கை அணிக்கு எதிராக மிகச்சிறப்பாக விளையாடியுள்ள விராட் கோலி, சமீப காலங்களில் ஸ்பின்னர்களுக்கு எதிராக தடுமாறு வருகின்றார்.
இந்த நிலையில் மூன்றாவது ஆட்டத்திற்கு பின் இலங்கை அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான குசால் மெண்டிஸ் விராட் கோலியின் ஜெர்சியில் கையெழுத்து பெற்றது தெரிய வந்துள்ளது.
குசால் மெண்டிஸ், தன்னிடம் இருந்த பேனாவை எடுத்து கையெழுத்து கேட்கள, உடனடியாக விராட் கோலியும் ஜெர்சியில் கையெழுத்திட்டு அன்புப் பரிசாக வழங்கினார்.
விராட் கோலி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும் இலங்கை அணியின் நட்சத்திர வீரரான குசால் மெண்டிஸ் ஜெர்சியில் கையெழுத்து பெற்ற வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.
தோல்வியடைந்தாலும், விராட் கோலி தான் ஹீரோ என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.