தெய்வமே அழைத்தது... கோவிலில் குஷ்புவுக்கு அளிக்கப்பட்ட மரியாதை!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த குஷ்பூ, கமல் - ரஜினி உட்பட பல பிரபலங்கள் உடன் நடித்துள்ளார். 

தெய்வமே அழைத்தது... கோவிலில் குஷ்புவுக்கு அளிக்கப்பட்ட மரியாதை!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த குஷ்பூ, கமல் - ரஜினி உட்பட பல பிரபலங்கள் உடன் நடித்துள்ளார். 

பிறப்பால் அவர் ஒரு இஸ்லாமியராக இருந்தாலும் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்ட பின் அவர் ஒரு இந்து பெண்ணாகவே வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் கேரளாவின் திருச்சூரில் உள்ள விஷ்ணு மாயா கோவிலில் சமீபத்தில் நடந்த நாரி பூஜைக்கு குஷ்பூ அழைக்கப்பட்டிருந்தார். 

இந்த பூஜையில் தான் அழைக்கப்பட்டது அதிர்ஷ்டமாக உணர்கிறேன் என்றும் மிகவும் குறிப்பிட்டத்தக்க நபர்கள் மட்டுமே இங்கு அழைக்கப்படுவார்கள் என்றும் அதனால் தெய்வமே என்னை தேர்ந்தெடுத்ததாக நான் நம்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இப்படி ஒரு பெருமையை எனக்கு வழங்கிய கோவிலில் உள்ள அனைவருக்கும் எனது பணிவான நன்றிகள், தினமும் பிரார்த்தனை செய்பவர்களுக்கும், நம்மை காக்க ஒரு சூப்பர் சக்தி இருப்பதாக நம்புபவர்களுக்கும், இன்னும் பல விஷயங்களை கொண்டு வரும் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்த சில புகைப்படங்களையும் குஷ்பு பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp