ஊடக அறம், உண்மையின் நிறம்!

நுவரெலியாவின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக, நுவரெலியா மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அம்பகமுவ, கொத்மலை மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்குள் காணப்படும் மலைபாங்கான பகுதிகள் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்கு இந்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் இன்று பிற்பகல் 1 மணிமுதல் நாளை பிற்பகல் 1 மணிவரையான 24 மணித்தியால காலப்பகுதியில் இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

குறித்த பிரதேசங்களில் கடந்த 24 மணித்தியாலங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவான நிலையில், மண்சரிவு, பாறைகள் சரிவு, தாழிறங்கள் உள்ளிட்ட பல அபாயங்கள் காணப்படுவதாக அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.